முத்துக்கருப்பன் மீதான வழக்கு: 3 மாதத்தில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனரும், திருச்சி ஆயுதப் படை ஐ.ஜியுமானமுத்துக்கருப்பன் மீதான வழக்கின் விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை- திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் கோடிக் கணக்கான ரூபாய்மதிப்புள்ள நிலத்தை தனது பதவியையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி முத்துக்கருப்பன்அபகரித்துக் கொண்டதாக கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்புப் பிரிவுபோலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் விசாரணை மிகவும் மந்தமாக இருப்பதாகவும் அதைவிரைந்து மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று கோரியும் உயர் நீதிமன்றத்தில் சண்முகம் மனுசெய்திருந்தார். இந்த மனு மீது நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது.
இந்தச் சூழ்நிலையில் மீண்டும் சண்முகம் இது தொடர்பாக மனு செய்தார். அதை விசாரித்த நீதிபதிகனகராஜ் தன் உத்தரவில்,
மனுதாரரின் மனுவையடுத்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த 2002ம் ஆண்டு அக்டோபர்28ம் தேதி தாக்கல் செய்த பதில் மனுவில் விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில்இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் உறுதி கூறப்பட்டது.
ஆனால் நான்கு மாதங்களாகியும் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே மூன்றுமாதங்களுக்குள் இந்த விசாரணையை முடித்து இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்என்று கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்தார்.
-->
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications