பாகிஸ்தானில் மேலும் ஒரு அல்-காய்தா தீவிரவாதி கைது
இஸ்லாமாபாத்:
சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின் லேடனின் அல்-காய்தா இயக்கத்தைச் சேர்ந்த மற்றொருமுக்கியமான தீவிரவாதி பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளான்.
பின் லேடனின் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்படும் காலித் ஷேக் முகமது என்பவன் சிலநாட்களுக்கு முன் ராவல்பிண்டியில் கைது செய்யப்பட்டான். அவனுடன் வேறு இரண்டுஅல்-காய்தா தீவிரவாதிகளும் பிடிபட்டனர்.
இந்நிலையில் யாசிர் அல்-ஜசாரி என்ற மற்றொரு முக்கியமான அல்-காய்தா தீவிரவாதியைபாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். லாகூரில் நடத்தப்பட்ட சோதனையின்போது இவன்கைது செய்யப்பட்டான்.
மொராக்கோ நாட்டைச் சேர்ந்த யாசிர் லாகூரில் ஒரு வாடகை வீட்டில் பதுங்கி இருந்தபோது சிக்கிக்கொண்டான். அல்-காய்தா தலைவர்களில் 7வது இடத்தில் இருப்பவன் யாசிர் என்று கருதப்படுகிறது.
தீவிர விசாரணைக்குப் பின்னர் யாசிர் விரைவில் அமெரிக்க அதிகாரிகளிடம்ஒப்படைக்கப்படுவான். காலித் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே இவன் பிடிபட்டுள்ளதாகத்தெரிகிறது.
இவனுடன் பாகிஸ்தானைச் சேர்ந்த குல்ஸெப் என்ற ஜாபர் என்ற தீவிரவாதியும் சோதனையின்போதுகைது செய்யப்பட்டான்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications