தமிழகத்தில் பெய்த கோடைமழை: மக்கள் மகிழ்ச்சி
தஞ்சாவூர்:
கோடை காலம் வாட்டி வதக்கி வரும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.
தமிழகம் முழுவதிலும் கோடை வெயிலின் கொடுமை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் வறட்சியால் வாடிக் கிடக்கும்தஞ்சை மாவட்டத்தின் சில பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.
நன்னிலம், முத்துப் பேட்டை, மன்னார்குடி ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர். இருப்பினும் இந்த மழையால் பெரிய அளவில் பலன் ஒன்றும் இருக்காது என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து இது போல மழை பெய்தால் நல்லது என்றும் விவசாயிகள் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர்.
இதேபோல சென்னையிலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று காலை லேசான மழை பெய்தது. அதிகாலை நேரத்தில் சில நிமிடநேரமே இந்த மழை பெய்ததால் பெரும்பாலான சென்னை மக்களுக்கு மழைபெய்ததே தெரியாமல் போனது.
கன்னியாகுமரி மாவட்டத்திலும் தொடர்ந்து அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பேச்சிப்பாறை,பெருஞ்சானி ஆகிய அணைகளில் நீர் மட்டம் 2 அடி அளவுக்கு உயர்ந்தது. இந்த மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவேஅவ்வப்போது கோடை மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications