விவசாயிகளுக்கு நிதியுதவி: ஊழலுக்கு வழி வகுக்கும்- வைகோ
சென்னை:
இலவச மின்சாரத்தை ரத்து செய்து விட்டு அதற்குப் பதிலாக விவசாயிகளுக்கு பணம் வழங்குவதாகஅரசு அறிவித்துள்ளது ஊழலுக்குத்தான் வழிவகுக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோதெரிவித்துள்ளார்.
பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ உள்ளிட்டமதிமுகவினர் இன்று காலை பூந்தமல்லி சிறப்பு பொடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அவர்களுக்கு வழக்கில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆடியோ கேசட்டுகள் போட்டுக்காட்டப்பட்டன.
இதையடுத்து அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 7ம் தேதிக்கு நீதிபதி ராஜேந்திரன் ஒத்திவைத்தார்.பின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த வைகோவிடம் நிருபர்கள் மின் கட்டண உயர்வுகுறித்து கேட்டபோது,
இலவச மின்சாரத்தை ரத்து செய்தது தவறு. மேலும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் பணம்வழங்குவதாக முதல்வர் அறிவித்துள்ளது ஊழலுக்குத்தான் வழி வகுப்பதாக அமையும்.
இந்தியை ஏற்கத் தயாராக இருப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.இது அண்ணாவின் கொள்கைக்கு எதிரானது என்றார் வைகோ.
பின்னர் வைகோ வேலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஜெ.க்கு வீரமணி பாராட்டு:
விவசாயிகளுக்கான நிதியுதவிகளை ஜெயலலிதா அறிவித்துள்ளதற்கு திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,
இலவச மின்சாரத்தை மாநில மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ரத்து செய்துள்ளது. இருப்பினும்விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஆண்டுக்கு ரூ.1,000 மற்றும் ரூ.100 எனவிவசாயிகளுக்கும், குடிசைவாசிகளுக்கும் நிதியுதவி செய்வதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதன் மூலம் விவசாயிகளுக்கும், குடிசைவாசிகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் கிடைக்கவகை செய்துள்ளார் முதல்வர். இதற்காக அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
மின்சாரக் கட்டண உயர்வுக்கு மத்திய அரசின் போக்குதான் காரணம். எனவே மத்திய அரசைவசைபாடுவதை விட்டு மாநில அரசின் மீது திமுகவும், பாஜகவும் பாய்வதில் அர்த்தம் இல்லைஎன்றார் வீரமணி.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications