ஏப்ரல் 7ல் ஊராட்சி பதவிகளுக்கு இடைத் தேர்தல்
சென்னை:
தமிழகம் முழுவதிலும் காலியாக உள்ள 429 ஊராட்சிப் பதவிகளுக்கு வரும் ஏப்ரல் 7ம் தேதி இடைத் தேர்தல்நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்புடன் வேட்பு மனுத் தாக்கலும் இன்று தொடங்கியது.
இது தொடர்பாக மாநில தேர்தல் அதிகாரி பழனிச்சாமி இன்று காலை நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் 429 ஊராட்சிப் பதவிகளுக்கு ஏப்ரல் 7ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கானமுறையான அறிவிப்பு இன்று வெளியிடப்படுகிறது. இன்றே வேட்பு மனுத் தாக்கலும் தொடங்குகிறது.
வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய இம்மாதம் 25ம் தேதிதான் கடைசி நாளாகும். மனுக்கள் 26ம் தேதி பரிசீலனைசெய்யப்படும்.
28ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். இதையடுத்து ஏப்ரல் 7ம் தேதி வாக்குப் பதிவுநடைபெறும்.
கடந்த தேர்தலில் போட்டியிட்டு கணக்குகளை சமர்ப்பித்துள்ளவர்களில் 1,463 பேர் விதிமுறைகளுக்குப் புறம்பாகசெலவழித்துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே அவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றார் பழனிச்சாமி.
மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய தலித் பஞ்சாயத்துக்களுக்கும் ஏப்ரல் 7ம் தேதிஇடைத் தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு பல முறை தேர்தல் நடைபெற்ற போதிலும் தேர்ந்தெடுக்கப்படும் தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள், மேல்ஜாதிக் காரர்களின் மிரட்டல் காரணமாகத் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விடுகின்றனர்.
-->


Click it and Unblock the Notifications
