மின் கட்டண உயர்வு: அரசுக்கு எதிராக விவசாயிகளை திரட்டும் எதிர்க் கட்சிகள்
சென்னை:
மின்கட்டண உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்துவது குறித்து இன்று அனைத்துக் கட்சிகள் கூடி விவாதிக்க உள்ளன.
தமிழகத்தில் மின் கட்டண் 23 சதவீதம் உயர்த்தப்பட்டது. 14 ஆண்டுகளாக விவசாயிகளுக்குத் தரப்பட்டு வந்த இலவச மின்சாரம் ரத்துசெய்யப்பட்டது. குடிசை வீடுகளுக்குத் தரப்பட்ட இலவச மின்சாரமும் வாபஸ் பெறப்பட்டுவிட்டது.
இதற்கு தமிழகமெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தான் மின் கட்டணத்தை உயர்த்தியதாக தமிழகஅரசு கூறியுள்ளது. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் இரு தவணையாக ரூ. 500 தரப் போவதாகவும் முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஆனால், விவசாயிகள் இதனால் ஓரளவுக்கு நிம்மதி அடைந்திருந்தாலும் தங்களது பம்ப் செட்களுக்குக் கட்டணம் செலுத்தும் நிலையில்தாங்கள் இல்லை என்று கூறுகின்றனர். கடும் வறட்சியால் இரு ஆண்டுகளாக விவசாயமே நடக்காத நிலையில் திடீரென கட்டணம் செலுத்தச்சொன்னால் என்ன செய்வது என்றே தெரியாமல் விவசாயிகள் குழம்பிப் போயுள்ளனர்.
பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் கேஸ் ஆகிய அன்றாட அவசியப் பொருள்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும்நிலையில் மின் கட்டணமும் உயர்ந்துள்ளது பொது மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பொது மக்களிடையே அரசு மீது நிலவும் அதிருப்தியை தங்களுக்கு சாதகமாகத் திரும்பும் முயற்சிகளில் எதிர்க் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.குறிப்பாக விவசாயிகளை அரசுக்கு எதிராகத் திரும்பும் முயற்சிகளில் அவை ஈடுபட்டுள்ளன.
முதலில் தனியே போராட்டம் அறிவித்த காங்கிரஸ் பின்னர் திமுகவுடன் சேர்ந்து போராட்டம் நடத்தத் தயார் என அறிவித்துள்ளது.
இதையடுத்து இன்று திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்கிறது. திமுக விவசாய அணியின் சார்பில் இந்தக் கூட்டத்துக்குஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கின்றன.
இதில் அரசை எதிர்த்து என்ன வகையான போராட்டம் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. இலவச மினசாரத்தை ரத்துசெய்தால் மாநிலம் முழுவதுமே மின் கட்டணத்தைச் செலுத்த மாட்டோம் என திமுக விவசாய அணி ஏற்கனவே கூறியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
அனைத்துக் கட்சி விவசாயிகளும் இதே முடிவை எடுத்தால் மாநிலத்தில் பெரும் பிரச்சனை உருவாகும்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications