ஹைதர் அலி உள்பட 23 தீவிரவாதிகளுக்கு காவல் நீட்டிப்பு
மதுரை:
பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட அல்-உம்மா தீவிரவாதி இமாம் அலியின் கூட்டாளிகளா ஹைதர் அலிஉள்ளிட்ட 23 பேருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுரை அருகே திருமங்கலத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் போலீஸாரைத் தாக்கி விட்டு இமாம் அலியும், ஹைதர்அலியும் தப்பிச் சென்றனர்.
சில நாட்களில் ஹைதர் அலி மட்டும் சிவகங்கையில் பிடிபட்டான். இமாம் அலி சிக்கவில்லை. பின்னர் சிலமாதங்களுக்கு முன் பெங்களூரில் ஒளிந்திருந்த இமாம் அலி உள்ளிட்ட ஐந்து தீவிரவாதிகளை தமிழகஅதிரடிப்படை போலீஸார் சுற்றி வளைத்துச் சுட்டுக் கொன்றனர்.
இமாம் அலி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தலைமறைவாக இருந்தபோது அவனுக்கு அடைக்கலம்கொடுத்ததாக 22 பேரை போலீஸார் கைது செய்திருந்தனர். அவர்கள் அனைவரும் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது நீதிமன்றக் காவல் முடிவடைவதையொட்டி, ஹைதர் அலி உள்ளிட்ட 23 பேரும் மதுரை முதலாவதுவிரைவு நீதிமன்ற நீதிபதி வெங்கடசாமி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
அனைவரின் காவலையும் மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள்மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications