நேரடி நெல் கொள்முதல் மையங்கள் கோரி தஞ்சையில் திமுகவினர் போராட்டம்
தஞ்சாவூர்:
காவிரி டெல்டா மாவட்டங்களில் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் மையங்களைத் திறக்கக் கோரிதஞ்சாவூரில் திமுக சார்பில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் பஸ் நிலையம் அருகே முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி. மணி தலைமையில் இந்தப் போராட்டம்நடந்தது.
உடனடியாக நேரடி நெல் கொள்முதல் மையங்களைத் திறக்க வேண்டும், இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டதைவாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அப்போது திமுகவினர் கோஷமிட்டனர்.
இதைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாகச் சென்ற திமுகவினர் தங்கள்கோரிக்கைகள் தொடர்பான மனு ஒன்றை கலெக்டரிடம் அளித்தனர்.
இதன் பின்னர் நிருபர்களிடம் மணி பேசுகையில்,
ஏற்கனவே நீர் இல்லாமல் குறுவை மற்றும் சம்பா சாகுபடிகளை காவிரி டெல்டா விவசாயிகள் இழந்துள்ளனர்.
இருந்தாலும் ஓரளவு சாகுபடி செய்த நெல்மணிகளைக் கூட விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இதை நேரடியாகப் பார்த்த பின்னர் பொறுக்க முடியாமல்தான் இந்தப் போராட்டத்தை நாங்கள் நடத்த முடிவுசெய்தோம் என்றார் மணி.
-->


Click it and Unblock the Notifications
