போருக்கு இந்தியா, ரஷ்யா, ஜெர்மனி, சீனா கடும் எதிர்ப்பு
துபாய்:
ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்துள்ளதற்கு இந்தியா, ரஷ்யா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் கடும்கண்டனம் தெரிவித்துள்ளன.
ஈராக் பேரழிவு ஆயுதங்களை வைத்திருந்தாலும் அவற்றை அழிப்பதற்கான முறை இதுவல்ல என்றும் கூறியுள்ளஇந்நாடுகள், இந்தப் போரால் ஏராளமான அப்பாவி மக்கள்தான் கொல்லப்படுவார்கள் என்று கவலைதெரிவித்துள்ளன.
ஈராக் மீது தாக்குதல் நடத்துவதை ஆரம்பத்திலிருந்தே ரஷ்யா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள்கடுமையாக எதிர்த்து வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா கண்டனம்:
எந்தக் காரணமும் இல்லாமல் ஈராக்கை அமெரிக்கா தாக்கியுள்ளதாக இந்தியா கூறியுள்ளது. ஏற்கனவே பொருளாதாரத் தடைகளால்பாதிக்கப்பட்டுள்ள அந் நாட்டு மக்களை இந்தப் போர் மேலும் துயரத்தில் தள்ளும் என இந்தியா கூறியுள்ளது.
அதேபோல் இந்திய கம்யூனிஸட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்தத் தாக்குதலைக் கடுமையாகக்கண்டித்துள்ளன.
ஜப்பான், பிலிப்பைன்ஸ் வரவேற்பு:
இதற்கிடையே இந்தத் தாக்குதலை ஜப்பான் வரவேற்றுள்ளது. அமெரிக்காவின் தாக்குதலை நான் முழுமையாகஆதரிக்கிறேன் என்று அந்நாட்டுப் பிரதமர் ஜுனிச்சிரோ கோய்சுமி கூறினார்.
அதேபோல் பிலிப்பைன்ஸ் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளும் இந்தத் தாக்குதலை வரவேற்றுள்ளன.
ஈராக் குழந்தைகளின் எதிர்காலம்?
இதற்கிடையே அமெரிக்காவின் தாக்குதல் ஈராக் குழந்தைகளை மிகவும் மோசமாகப் பாதிக்கும் என்று ஐ.நா.குழந்தைகள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
அனைத்து வகையிலும் ஈராக் குழந்தைகள்தான் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்று அது கூறியுள்ளது.
இதற்கிடையே போருக்குப் பின்னர் ஈராக்கின் புனர்வாழ்வுக்காக 1.5 பில்லியன் டாலர்கள் வரை தேவைப்படும்என்று ஐ.நா. கூறியுள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications