நாளை தமிழக பட்ஜெட் தாக்கல்
சென்னை:
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. நாளையே பட்ஜெட்டும் தாக்கல்செய்யப்படுகிறது.
நாளை காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பொன்னையன் 2003-04ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை(பட்ஜெட்) தாக்கல் செய்கிறார்.
இந்தக் கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை சபையின் அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவுசெய்யும். இருப்பினும் மே மாதம் வரை கூட்டத் தொடர் நீடிக்கும் என்று தெரிகிறது.
இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது, மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது உள்ளிட்ட பல்வேறு சூடானபிரச்சினைகள் இருப்பதால் இந்தக் கூட்டத் தொடரில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதியை கூட்டத் தொடரில் பங்கேற்க அனுமதி கோரி அக்கட்சி சார்பில்போராட்டம் நடத்தப்படலாம் என்றும் தெரிகிறது.
காளிமுத்து வேண்டுகோள்:
இதற்கிடையே இந்த பட்ஜெட் கூட்டத் தொடரை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றுஅனைத்துக் கட்சிகளையும் சபாநாயகர் காளிமுத்து கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
நிதி அமைச்சர் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த பிறகு, எனது அறையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறும். சட்டசபை தொடர் எத்தனை நாட்களுக்கு நடைபெறும்என்பது குறித்து அப்போது முடிவு செய்யப்படும்.
மே 15ம் தேதி வரையிலும் கூட்டத் தொடர் நடைபெறலாம். நீண்ட தொடராக இது இருக்கும்.
சட்டசபையில் மோதல்கள் எழாமல் சுமூகமான முறையில் கூட்டத் தொடரை நடத்தி முடிக்க அனைத்துக் கட்சித்தலைவர்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு கட்சியின் முன்னணித் தலைவர்களின் சொல் கேட்டு மற்ற உறுப்பினர்கள் நடந்து கொண்டால்பிரச்சனையே இல்லை.
திமுக உறுப்பினரான பரிதி இளம்வழுதி விவகாரம் குறித்து சட்டசபையில் விவாதித்துதான் முடிவு செய்ய முடியும்.நானாக எந்த முடிவும் எடுக்க முடியாது.
என் உதவியாளர் மீது நடந்த கத்திக் குத்துத் தாக்குதல் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவத்திற்கும் எனது பிற உதவியாளர்கள், ஊழியர்கள் மாற்றப்பட்டதற்கும் எந்தவித தொடர்பும்கிடையாது. இது வழக்கமான மாறுதல்தான் என்றார் காளிமுத்து.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications