சதாமை குறி வைத்து ஏவப்பட்ட ஏவுகணை
பாக்தாத்:
இன்று காலை அமெரிக்கா தனது முதல் தாக்குதலை சதாம் ஹூசேனைக் குறி வைத்து நடத்தியுள்ளது.காலை 6 மணிக்கு அமெரிக்கக் கெடு முடிவடைந்தது. இதனால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம்என்று எதிர்பார்க்கப்பட்டது. இந் நிலையில் காலை 6.30 மணியளவில் முதல் ஏவுகணைத் தாக்குதல் பாக்தாத் நகரின்தெற்குப் பகுதியில் நடந்தது.
சில ஈராக்கியத் தலைவர்கள் பதுங்கி இருந்த வீடு தாக்கப்பட்டதாக அமெரிக்கா கூறியது. ஆனால், அந்தத்தலைவர்கள் யார், யார் என்பதை தெரிவிக்கவில்லை.
ஆனால், அந்த வீட்டில் சதாம் ஹூசேன் இருந்தார் என்று இப்போது தெரியவந்துள்ளது. இத் தாக்குதலில் அவர்காயமடைந்தாரா?. அவர் வேறிடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டாரா? போன்ற விவரங்களை அமெரிக்காதெரிவிக்கவில்லை.
எல்லையில் தரைப்படை சண்டை:
இதற்கிடையே ஈராக்- குவைத் எல்லையில் அமெரிக்கப் படைகளை நோக்கி ஈராக் படைகள் ஆர்ட்டிலரிதுப்பாக்கிகளால் தாக்க ஆரம்பித்துள்ளன. இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே தீவிர துப்பாக்கிச்சண்டையும் தொடங்கியுள்ளது.
குவிந்திருக்கும் அமெரிக்கப் படைகள்:
அமெரிக்க- பிரிட்டன் படைகளின் ஆயிரக்கணக்கான டாங்கிகள், கவச வாகனங்கள், பீரங்கிகள் குவைத்எல்லையில் குவிக்கப்பட்டுள்ளன. அவை எந்த நேரமும் ஈராக்குக்குள் நுழையலாம் என்று தெரிகிறது.
தப்புவது எப்படி?
இதற்கிடையே ஈராக் படைகளின் மீது அமெரிக்க போர் விமானங்கள் இன்று லட்சக்கணக்கான துண்டுப்பிரசுரங்களை வீசின.
அதில், அமெரிக்கப் படைகளைத் தாக்க வேண்டாம். உள்ளே நுழையும் அமெரிக்கப் படைகளைத் தாக்காமல்இருந்தால் உங்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் வராமல் பார்த்துக் கொள்வோம். உங்களுக்கு எல்லா உதவியும்செய்வோம்.
ஈராக்கின் டாங்கிகள், கவச வாகனங்கள், ராணுவ வாகனங்களை எங்கள் விமானங்கள் தாக்கும். எனவே, அவற்றைவிட்டு 1 கி.மீ. தூரம் தள்ளியே நில்லுங்கள். சரணடைய விரும்பினால் வெள்ளைக் கொடியை காட்டுங்கள் என்றுகூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications