ஈராக்கிய ரேடியோ கைப்பற்றியது அமெரிக்கா
பாக்தாத்:
ஈராக்கிய ரேடியோ அலைவரிசையை அமெரிக்க ராணுவம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுவிட்டது.
இதனால் இனி ஈராக்கிய ரேடியோ செயல்படுவதும் தடுக்கப்பட்டுள்ளது. அலைவரிசையை (frequency) தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுள்ள பென்டகன் விரைவில் தனது ஒலிபரப்பை இந்த ரேடியோவில் தொடங்கும் என்று தெரிகிறது.
முன்னதாக இந்த ரேடியோவில் இன்று காலை பேசிய ஈராக்கிய அதிபர் சதாம் ஹூசேனின் மகன் குவாசி ஹூசேன், இந்த நாட்டைஇறைவன் காப்பாற்றுவான். ஈராக்கில் நுழையும் அமெரிக்கர்கள் பிணமாகத் தான் திரும்புவார்கள் என்றார்.
வாஜ்பாய் ஆலோசனை:
ஈராக்கில் அமெரிக்கத் தாக்குதல் தொடங்கியதையடுத்து தேசிய பாதுகாப்பு குறித்த கேபினட் கமிட்டி உறுப்பினர்களுடம் பிரதமர் வாஜ்பாய்இன்று காலை அவசர ஆலோசனை நடத்தினார்.
வளைகுடாவில் உள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்து வருவது, இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கக் கப்பல்களின் நடமாட்டம்,இந்திய நீர்மூழ்கிகளை இடம் மாற்றுவது, இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பு, நாட்டின் பெட்ரோலிய கையிருப்பு ஆகிய விவகாரங்கள்குறித்து இதில் விவாதிக்கப்பட்டன.
வாஜ்பாயின் இல்லத்தில் நடந்த இக் கூட்டத்தில் துணைப் பிரதமர் அத்வானி, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்,வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங், முப்படைத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தூதரகங்களுக்கு பாதுகாப்பு:
இந் நிலையில் இந்தியாவில் உள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டன் தூதரகங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத்தூதரகங்களை இஸ்லாமியத் தீவிரவாதிகள் தாக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைச் சுற்றி ஆயுதம் தாங்கிய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகம் மூடல்:
அதே போல உலகம் முழுவதும் அமெரிக்க, பிரிட்டன் தூதரகங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல் அபாயம் அதிகம்உள்ள பாகிஸ்தானில் தனது தூதரகங்களை அமெரிக்கா மூடிவிட்டது. சில ஊழியர்கள் தவிர மற்ற அனைவரையும் உடனே நாடு திரும்பவும்அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
புஷ்- பிளேர் பேச்சு:
இந் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர் ஆகியோர் இன்று தொலைபேசியில் ஆலோசனைநடத்தினர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications