ஈராக் பதிலடி: குவைத் மீது ஸ்கட் ஏவுகணை தாக்குதல்
குவைத் பாலைவனப் பகுதி:
குவைத் மீது ஈராக் ஸ்கட் ஏவுகணைகளால் தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு ஏவுகணையை மட்டுமே அமெரிக்காவின் பேட்ரியாட்ஏவுகணை நடுவானில் தடுத்து தகர்த்தது. ஆனால், 6 ஏவுகணைகள் குவைத்துக்குள் விழுந்து வெடித்தன. ஆனால், இதில் எத்தனை பேர்பலியானார்கள் என்று தெரியவில்லை.
ஈராக் ஏவிய ஏவுகணைகளில் ஒன்று குவைத் பாலைவனப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளை நோக்கி வந்தது. ஆனால்,அந்த ஏவுகணையை பேட்ரியாட் ரக ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகள் நடுவானில் தாக்கி அழித்தன.
மற்ற 6 ஏவுகணைகளும் குவைத்தின் வட பகுதியில் விழுந்து வெடித்தன.
ஈராக்கில் இருந்து இன்று பிற்பகலில் ஏவுகணை கிளம்பியுடன் அதைக் கண்டறிந்த உளவு விமானங்களும் செயற்கைக் கோள்களும் உடனேஅது குறித்து அமெரிக்கப் படைகளுக்கு தகவல் தந்தன. இந்த ஏவுகணையில் ரசாயன ஆயுதம் இருக்கும் என்ற அச்சம் இருந்ததால்அமெரிக்கப் படையினர் பாதுகாப்பு உடைகளை அணிந்து பதுங்கினர்.
ஆனால், இந்தப் படையினரை நோக்கி வந்த ஏவுகணையை 3 பேட்ரியாட் ஏவுகணைகள் நடுவானில் வழி மறித்துத் தாக்கின. இதில் அந்தஏவுகணை வெடித்துச் சிதறியது.
ஆனால், மற்ற ஏவுகணைகள் குவைத்துக்குள் வந்து விழுந்தன. இந்தத் தாக்குதல் நடந்தவுடன் குவைத் முழுவதும் அபாய எச்சரிக்கைஒலிக்கப்பட்டது.
குவைத்தில் பெரும் பீதி:
இந்தத் தாக்குதலையடுத்து குவைத் முழுவதும் பெரும் பீதி பரவியுள்ளது. அவ்வப்போது தொடர்ந்து அபாய எச்சரிக்கை ஒலி நாடுமுழுவதும் ஒலித்துக் கொண்டே உள்ளது. இந்த ஒலியைக் கேட்டவுடன் அனைவரும் ரசாயன, வேதியியல் ஆயுதங்களுக்கு எதிரானமுகமூடிகளை அணிந்து கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
பல இடங்களில் குவைத் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். குறிப்பாக வெளிநாட்டினர் அங்கிருந்து தப்பியோடுவதில்தீவிரம் காட்டி வருகின்றனர்.
நிலைமை மிக மோசமாக இருப்பதாகவும், வீடுகளை விட்டு யாரும் வெளியில் வர வேண்டாம் எனவும் நாட்டு மக்களை குவைத் அரசுஎச்சரித்துள்ளது. அனைத்துத் தெருக்களிலும் குவைத் மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்கள் நடமாட்டம் மட்டுமே உள்ளது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications