15 இலங்கை மீனவர்கள் விடுதலை

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்:

இந்திய கடல் எல்லைக்குள் ஊடுறுவியதாகக் கைது செய்யப்பட்ட 19 இலங்கை மீனவர்களில் 15 பேர் விடுதலைசெய்யப்பட்டனர்.

தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் 4 படகுகளில் 19 இலங்கை மீனவர்கள் ஊடுருவி மீன் பிடித்தனர்.அவர்களை கடலோரக் காவல் படையினர் கைது செய்து தூத்துக்குடி தெர்மல் நகர் போலீஸ் நிலையத்தில்ஒப்படைத்தனர்.

அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ராமநாதபுரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மதுரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி ரவீந்திரன்.

இந்நிலையில் நேந்று மீண்டும் அனைவரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது லட்சுமண்பெர்னாண்டோ, அந்தோணி லியோனல், ஜான் குடிகாமினி, அந்தோணி சுஜீத் பெர்னாண்டோ ஆகியோரைத் தவிரமற்ற 15 பேரையும் விடுதலை செய்து நீதிபதி ரவீந்திரன் உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜாராமனிடமிருந்து ஆட்சேபணையில்லா சான்றிதழ் கொடுக்கப்பட்டதும் 15 பேரும்சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.

தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிப்பு:

இதற்கிடையே இந்த மாதத் துவக்கத்தில் இலங்கை மீனவர்களால் கடத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டமீனவர்களின் 31 படகுகளை இலங்கை அரசு விடுவித்துள்ளது.

கடந்த 3ம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுமார் 139மீனவர்களை இலங்கை மீனவர்களும் கடற்படையினரும் கடத்திச் சென்று விட்டனர். அவர்களுடைய படகுகளும்பறிமுதல் செய்யப்பட்டன.

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் பின்னர் இந்திய அரசின் முயற்சிகளைத் தொடர்ந்துவிடுவிக்கப்பட்டனர். அவர்களில் இன்னும் 24 பேர் தலைமன்னார் சிறையில் உள்ளனர். விரைவில் அவர்களும்விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.

இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்களின் 31 படகுகளை இலங்கை அரசு விடுவித்துள்ளது. அவை இன்று காலைராமேஸ்வரத்திற்கு வந்து சேர்ந்தன.

அபின், கஞ்சா கடத்திய 3 இலங்கை நபர்கள்:

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் போதைப் பொருட்களைக் கடத்தியதாக இலங்கையைச் சேர்ந்த 3 நபர்களைப்போலீசார் கைது செய்துள்ளனர்.

இலங்கையிலிருந்து போதைப் பொருள்கள் ராமேஸ்வரம் வழியாகக் கடத்தப்படுவதாகப் போலீசாருக்குத் தகவல்கிடைத்தது. இதையடுத்து ராமேஸ்வரத்தில் போலீசார் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தினர்.

அப்போது அரிச்சால்முனையில் மூன்று பேர் வந்து இறங்கினர். அவர்களை சுற்றி வளைத்து விசாரித்தபோது,அவர்கள் இலங்கை-யாழ்ப்பாணத்தில் உள்ள நெல்லூரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

அவர்களைச் சோதனையிட்ட போலீசார் அவர்களிடமிருந்து 15 கிலோ எடையுள்ள கஞ்சா, அபின் மற்றும் மார்பின்ஆகிய போதைப் பொருட்களைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் வேறு நான்கு பேர் போலீசார் பிடியிலிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+