ஈராக் போர் போன்றது தமிழக பட்ஜெட்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல்:

ஈராக்கில் அமெரிக்கா குண்டு மழை பொழிந்துள்ளதைப் போலவே மக்கள் மீது வரி மழைகளைதமிழக பட்ஜெட் பொழிந்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

2003-04ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் பொன்னையன் நேற்று சட்டசபையில்தாக்கல் செய்தார். ரூ.430 கோடிக்குப் புதிய வரிகளை அறிமுகப்படுத்தியுள்ள இந்த பட்ஜெட்டைபல்வேறு கட்சிகளும் கண்டித்துள்ளன.

இந்நிலையில் கருணாநிதியும் இந்த பட்ஜெட்டைக் கண்டித்துள்ளார். சமீபத்தில் நடந்து வரும் உலகநடப்புகளுடன் ஒப்பிட்டு தமிழக அரசையும் முதல்வர் ஜெயலலிதாவையும் அவர் விமர்சிப்பதுவழக்கம்.

அதன்படி பட்ஜெட் குறித்து இன்று கொடைக்கானலில் நிருபர்களிடம் கருணாநிதி பேசுகையில்,

தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் ஈராக் போரைப் போலத்தான் உள்ளது.

ஈராக் மீது அமெரிக்கா குண்டுகளை மழையாகப் பொழிவது போல் தமிழக மக்கள் மீது வரிகளைமழையாகப் பொழிந்துள்ளது இந்த பட்ஜெட்.

கொடைக்கானலில் நான் கலந்து கொள்ளவிருந்த விழா மேடையை இடிக்க ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்களை அவரும் தமிழகஅரசும் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றார் கருணாநிதி.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+