முன்னேறும் அமெரிக்க படைகள்: சபவான் நகர் வீழ்ந்தது

Subscribe to Oneindia Tamil

சப்வான்:

அமெரிக்க - பிரிட்டிஷ் கூட்டுப் படைகள் ஈராக்கின் சபவான் நகரையும் கைப்பற்றியுள்ளன.

முதலில் குவைத்தையொட்டிய போ வளைகுடாவையும் அதன் எண்ணெய்க் கிணறுகளையும் பிரிட்டிஷ் படைகள்பிடித்தன. அதைத் தொடர்ந்து உம் கஸ்ஸர் நகர் பிடிபட்டது. இதைத் தொடர்ந்து நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ளஇரு விமான தளங்களும் வீழ்ந்தன. இந்த இடங்களில் எல்லாம் அமெரிக்க- பிரிட்டிஷ் கொடிகள்ஏற்றப்பட்டுள்ளன.

இந்த இடங்களைப் பாதுகாக்க ஆயிரக்கணக்கான கமாண்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் ஈராக்கின் தென் பகுதியில் உள்ள சப்வான் நகரையும் அமெரிக்க- பிரிட்டிஷ் படைகள் நள்ளிரவில்பிடித்தன. இப்போது பாஸ்ரா நகரைப பிடிக்கும் முயற்சியில் கூட்டுப் படைகள் ஈடுபட்டுள்ளன.

அமெரிக்காவின் 7வது கேவல்ரி படையும் பிரிட்டனின் 7ம் ஆரோர்ட் பிரிகேடும் பாஸ்ராவை நோக்கி முன்னேறிவருகின்றன. சுமார் ஆயிரம் டாங்கிகள், கவச வாகனங்கள், பீரங்கிகள், டாங்கிகள, எரிபொருள், உணவுவாகனங்கள் பாஸ்ராவை நோக்கிச் சென்றவண்ணம் உள்ளன.

இந்தப் படைகளுக்கு அமெரிக்க, பிரிட்டிஷ் விமானங்களும் ஹெலிகாப்டர்களும் வான் பாதுகாப்பு தந்துகொண்டுள்ளன.

பல இடங்களில் இந்தப் படைகளை ஈராக்கியப் படைகள் எதிர்த்துத் தாக்கி வருகின்றன. ஆனால், பல இடங்களில்டாங்கிகளையும் துப்பாக்கிகளையும் போட்டுவிட்டு ஈராக்கியப் படை வீரர்கள் ஓட ஆரம்பித்துள்ளனர். இந்தடாங்கிகளையும் ஆயுதங்களையும் அமெரிக்கப் படைகள் டாங்கிகளைக் கொண்டு குண்டு வீசி தகர்த்துவருகின்றனர்.

அதே போல சரணைடையும் ஈராக்கிய வீரர்களை மண்டியிட வைத்து முழுமையாக சோதனையிடும் அமெரிக்கப்படைகள் அவர்களை தனியே பிரித்து வாகனங்களில் ஏற்றி அழைத்துச் செல்கின்றனர். ஈராக்கின் படை பலம்,தகவல் தொடர்புப் பிரிவுகள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

அவர்களிடம் உள்ள கோப்புகள், ராணுவக் குறிப்புகளை கைப்பற்றிவிட்டு அவர்களை குவைத் நகருக்குள்கொண்டு செல்கின்றனர்.

பின்னர் அவர்களை சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களுக்குள் அடைத்து வருகின்றனர்.அவர்கள் போர்க் கைதிகள் தொடர்பான ஜெனிவா ஒப்பந்தத்தின்படி நாகரீகமான முறையில் நடத்தப்படுவார்கள்என அமெரிக்கா அறிவித்துள்ளது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+