பெரம்பலூர்: வாந்தி, மயக்கத்தால் 9 பேர் பலி
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். அப்பகுதியில்பரவி வரும் மர்ம நோயால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
பெரம்பலூர் அருகே உள்ள பூலாங்குறிச்சி கிராமத்தில் கடந்த சில மாதங்களாகப் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 20க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில்சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் ஐந்து பேர் கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்தனர். மற்றவர்களுக்குத் தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இவர்களில் மேலும் நான்கு பேர் இறந்துள்ளனர். இன்னும் சிலரின் நிலைமைகவலைக்கிடமாக உள்ளது. ஆத்தூர் மற்றும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைகளில் அவர்கள்சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே மேலும் சிலர் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில்சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
அசுத்தமான குடி நீரைக் குடிப்பதால் ஏற்படும் நோய் காரணமாகவே பூலாங்குறிச்சி கிராம மக்கள்வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் அந்தக் கிராம மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. தங்கள் கிராமத்திற்கு உரியமருத்துவக் குழுவை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications