கருணாநிதி விழா மேடையை இடிக்க உத்தரவிட்ட ஜெ.
மதுரை:
கொடைக்கானலில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொள்வதற்காக அமைக்கப்பட்ட விழாமேடையை அகற்ற போலீஸார் உத்தரவிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கருணாநிதி "தாய்" காவியத்தை தமிழில் கவிதை நடையில் மொழி பெயர்க்கும் பணிக்காககொடைக்கானல் சென்றுள்ளார். இன்று அவர் கொடைக்கானலில் இருந்து புறப்படுகிறார்.
இதையடுத்து அவருக்கு வரவேற்பு அளிப்பதற்காக கொடைக்கானலில் உள்ள மூஞ்சிக்கல் என்றஇடத்தில் 3 அடி உயர மேடை ஒன்றை திமுகவினர் எழுப்பினர். நேற்று அந்த மேடையில் பந்தல்போடும் பணி நடந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு அங்கு வந்த மாவட்ட வருவாய் அதிகாரி(ஆர்.டி.ஓ.), திடீரென்று அந்த மேடையை இடிக்க உத்தரவிட்டார். சிமெண்ட் மற்றும் செங்கற்களால்கட்டப்பட்டிருந்த அந்த மேடையை இடித்து விட்டு மரத்தால் மேடையை எழுப்பிக் கொள்ளுங்கள்என்று திமுகவினரிடம் அவர் கூறினார்.
ஆனால் அங்கிருந்த முன்னாள் திமுக அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் உள்ளிட்ட திமுகவினர்அதற்கு மறுத்தனர். கருணாநிதி சென்ற பின்னர் மேடைய அகற்றி விடுவோம் என்று அவர்கள்கூறினர்.
"அதெல்லாம் எனக்குத் தெரியாது. மேடையை இடித்துவிடுமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்"என்று ஆர்.டி.ஓ. கூற, திமுகவினர் தொடர்ந்து மறுக்க இரு தரப்பினருக்கும் இடையே கடும்வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து கொடைக்கானல் நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குநர் லிங்க சுப்பிரமணியமும்அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். அனுமதி இன்றி இந்த மேடை போடப்பட்டுள்ளதாகக் கூறியஅவர், இது தொடர்பாக போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஜவஹர் சந்திரசேகர் நூற்றுக்கணக்கான ஆயுதப்படைபோலீசாருடன் கொடைக்கானல் வந்து சேர்ந்தார். இதையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம்ஏற்பட்டது.
இதற்கிடையே மாவட்ட கலெக்டர் செந்தில்குமாரும் அங்கு வந்து சேர்ந்தார். கருணாநிதிகொடைக்கானலில் பேசக் கூடாது என்று எங்களுக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதுஎன்று கூறிய அவர், அதனால் இந்த மேடையை அகற்றியே தீருவோம் என்றார்.
இதனால் அவர்களுக்கும் திமுகவினருக்கும் இடையே இரவு வரை தகராறு தொடர்ந்தது. இதைத்தொடர்ந்து வேறு இடத்தில் மேடை போடும் பணியில் திமுகவினர் தற்போது ஈடுபட்டுள்ளதாகத்தெரிகிறது. அந்த இடத்திலும் கருணாநிதியைப் பேச மாவட்ட நிர்வாகம் அனுமதிக்குமா என்பதுதெரியவில்லை.
-->












Click it and Unblock the Notifications