அமெரிக்கா, ஈராக்குக்கு புலிகள் அறிவுரை
ஹகோனே:
அமைதிக்கான வழிமுறைகளை எங்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் என்று அமெரிக்காமற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்கு விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன்பாலசிங்கம் அறிவுரை கூறியுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அருகே உள்ள ஹகோனே நகரில் புலிகளுக்கும் இலங்கைஅரசுத் தரப்பினருக்கும் இடையிலான ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நேற்றுடன்நிறைவடைந்தன.
ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தத் தொடங்கியதை அடுத்து இலங்கை அமைதிப்பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்பட்டன. இதனால் நேற்று முன்தினமும் நேற்றும் முக்கியமானவிவாதங்கள் குறித்து இரு தரப்பினரும் பேசவில்லை. நேற்று காலை முறைப்படி ஜப்பான் பேச்சுக்கள்முடிவடைந்தன.
இதைத் தொடர்ந்து நிருபர்களிடம் பாலசிங்கம் பேசுகையில்,
ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதி இன்றி ஈராக் மீது அமெரிக்கா தாக்குதலைத் தொடங்கியிப்பதுசரியான செயல் அல்ல.
அதற்காக நாங்கள் ஈராக்கை ஆதரிக்கிறோம் என்று நினைத்துவிடக் கூடாது. ஐ.நா. தீர்மானத்திற்குக்கட்டுப்பட மறுத்துள்ள அந்நாட்டையும் கடுமையாகக் கண்டிக்கிறோம்.
வன்முறைக்குப் பெயர் போன நாங்களே தற்போது அமைதிப் பாதைக்கு முழுமையாகத்திரும்பியுள்ளோம். அமைதிக்காக நாங்கள் எடுத்து வரும் முயற்சிகள், அனைத்து வன்முறைஇயக்கங்கள் மற்றும் நாடுகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அமைதி வழிகளில் ஈடுபடுவது எப்படி என்பதை எங்களிடமிருந்து அமெரிக்காவும், ஈராக்கும்கற்றுக் கொள்ள வேண்டும். அமைதியான பேச்சுவார்த்தைகள் மூலம் நீண்ட காலப் பிரச்சனைகளைநிச்சம் தீர்த்துக் கொள்ள முடியும் என்றார் பாலசிங்கம்.
இலங்கை அரசு அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான அமைச்சர் பெய்ரிஸும்பாலசிங்கத்தின் கருத்துக்களை வரவேற்றார். "புலிகளும் நாங்களும் அமைதிப் பேச்சுக்கள் மூலம் பலபிரச்சனைகளைத் தீர்த்துள்ளோம். அமெரிக்காவும் ஈராக்கும் எங்களிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார் பெய்ரிஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications