சென்னை வந்தார் நேபாள மன்னர்
சென்னை:
நேபாள மன்னர் ஞானேந்திரா 5 நாள் பயணமாக இன்று காலை சென்னை வந்து சேர்ந்தார்.
ஞானேந்திராவும் மற்றும் நேபாள ராணி கோமல் ராஜ்ய லட்சுமியும் டெல்லியில் இருந்து தனிவிமானத்தில் இன்று சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினர். அவர்களுடன்இந்தியாவுக்கான நேபாள தூதர் பேக் பகதூர் தாபா உள்ளிட்ட 25 பேரும் வந்திருந்தனர்.
அவர்களை முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர்.
காஞ்சி சங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் துறவறம் பூண்டதன் 50ம் ஆண்டு விழாக்கொண்டாட்டங்கள் சென்னையில் நேற்று தொடங்கின.
இந்நிலையில் இன்று மாலை சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்நடைபெறும் இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் ஞானேந்திராவும் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத்துவக்கி வைக்கவுள்ளார்.
நாளை நேபாள மன்னரும் ராணியும் காஞ்சிபுரம் செல்கின்றனர். அங்கு ஆதி சங்கரரின் சிலைதிறப்பு விழாவில் கலந்து கொள்ளும் அவர்கள், பின்னர் காஞ்சி மடத்துக்கும் காமாட்சி அம்மன்கோவிலுக்கும் செல்கின்றனர்.
பின்னர் நாளை மறுநாள் முதல் மதுரை, ராமேஸ்வரம் ஆகிய ஊர்களுக்கும் நேபாள மன்னரும்ராணியும் செல்கின்றனர்.
தமிழில் பெயர் சூட்டு விழாவுக்கு அனுமதி மறுப்பு:
இதற்கிடையே நேபாள மன்னர் வருகையையொட்டி மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்சார்பில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பெயர் மாற்ற நிகழ்ச்சிக்கு போலீஸ் அனுமதிமறுத்துள்ளது.
இது தொடர்பாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் பொறுப்பில் உள்ள மதுரை மண்டல டி.ஐ.ஜி.கந்தசாமி நிருபர்களிடம் பேசுகையில்,
மதுரைக்கு நேபாள மன்னர் வருகை தருகிறார். அந்த சமயத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில்பெயர் மாற்ற விழா நடக்கவுள்ளது. எனவே பாதுகாப்பு கருதி அவர்களுடைய விழாவுக்கு அனுமதிமறுக்கப்படுகிறது.
நேபாள மன்னருக்கு விரிவான பாதுகாப்பு கொடுக்கப்படும். அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும்முழுமையாக செய்யப்பட்டுள்ளன என்றார் கந்தசாமி.
இந்து மதத்திலிருந்து தலித் மக்கள் வேறுபட்டவர்கள். எனவே இந்துப் பெயர்களை மாற்றி தூயதமிழில் பெயர் வைக்கும் நிகழ்ச்சியை தமிழகத்தில் ஆங்காங்கே நடத்தி வருகிறது விடுதலைத்சிறுத்தைகள் அமைப்பு.
உலகிலேயே ஒரே இந்து நாடான நேபாள நாட்டின் மன்னர் ஞானேந்திரா வரும் சமயத்தில்இந்நிகழ்ச்சி நடந்தால் தேவையில்லாத விளைவுகள் ஏற்படலாம் என்று கருதித்தான் போலீஸார்விடுதலைச் சிறுத்தைகளின் நிகழ்ச்சிக்குத் தடை விதித்துள்ளனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications