மே 17ல் பிளஸ் டூ தேர்வு முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே 17ம் தேதி வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர்பழனிவேலு கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
பிளஸ் டூ தேர்வுகள் முடிந்து விட்டன. விடைத் தாள்கள் திருத்தும் பணி 25ம் தேதி முதல் தமிழகம்முழுவதிலும் உள்ள 42 விடை திருத்தும் மையங்களில் தொடங்கும்.
முடிவுகள் மே 17ம் தேதி வெளியாகும் வகையில் ஏற்பாடுகள் செய்துள்ளோம். தேர்வுகளின்போதுபிட் அடித்தது, காப்பி அடித்தது, ஆள் மாறாட்டம் செய்தது போன்றவற்றிற்காக பிடிபட்டவர்கள் மீதுஉரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பிளஸ் டூ மறு தேர்வு ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை மாதத் தொடக்கத்தில் நடைபெறும் என்றார்பழனிவேலு.
-->












Click it and Unblock the Notifications