லஞ்சம்: இன்ஸ்பெக்டர் கர்ணனுக்கு போலீஸ் காவல்
சென்னை:
வட்டிக் கடைக்காரரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டிப் பணம் பெற்ற சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர்கர்ணன் உள்ளிட்ட 4 போலீசாரை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சென்னை நீதிமன்றம்அனுமதி அளித்துள்ளது.
விழுப்புரத்தைச் சேர்ந்த வட்டிக் கடைக்காரர் பக்தவச்சலத்தை மிரட்டி ரூ.2 லட்சம் வரை லஞ்சப்பணம் பெற்ற சென்னை-அண்ணா சாலை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கர்ணன், போலீஸ்ஏட்டுக்களான லட்சுமிபதி, ஜமாலுதீன் மற்றும் கனகராஜ் ஆகியோர் கடந்த வாரம் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டனர்.
தமிழகப் போலீஸ் வட்டாரத்தையே கலக்கியுள்ள இந்தக் கைது சம்பவத்தைத் தொடர்ந்து, அவர்கள்வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அவர்களுடைய சொத்துக்கள் குறித்தும், இதற்கு முன் லஞ்சம்ஏதும் பெற்றுள்ளார்களா என்பது குறித்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டது.
கைதாகியுள்ள நான்கு போலீசாரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களைப் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னைமுதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமலிங்கம், கர்ணன் உள்ளிட்ட நான்கு போலீசாரையும் போலீஸ்காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். மேலும் வரும் 25ம் தேதி அவர்களைநீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் அவர் உத்தரவிட்டார்.
10 நாட்களுக்கு அவர்களைப் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோரப்பட்டது. ஆனால் அதைநிராகரித்து மூன்று நாட்களுக்கு மட்டுமே நீதிபதி அனுமதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications