போருக்கு எதிராக தொடர்கின்றன மக்கள் போராட்டங்கள்
கெய்ரோ:
போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் உலகம் முழுவதும் போருக்கு எதிரான போராட்டங்களும்தீவிரமடைந்து கொண்டுள்ளன.
பெரும்பாலான நாடுகளில் அமெரிக்கத் தூதரகங்களைத் தாக்க போராட்டக்காரர்கள் முயன்றனர்.
அமெரிக்காவுக்கு தீவிரமான ஆதரவு தெரிவித்து வரும் ஏமன் நாட்டில் நடந்த போராட்டம் வன்முறையாகமாறியது. அமெரிக்கத் தூதரகத்துக்குள் நுழைய முயன்ற மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே சண்டைவெடித்தது.
இதில் போலீசார் நடத்தியத் தாக்குதலில் 4 மக்கள் இறந்தனர்.
அதே போல எகிப்து தலைநகர் கெய்ரோவில் வழக்கறிஞர்கள் தலைமையில் மாபெரும் அமெரிக்க எதிர்ப்புப்போராட்டம் நடந்தது. இங்கும் போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே நடந்த மோதலில் 40 பேர்காயமடைந்தனர்.
ஜோர்டானிலும் இதே போன்ற போராட்டங்கள் நடந்தன. இது தவிர உலகம் முழுவதும் போராட்டஙகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.
போருக்கு தீவிர எதிர்ப்புத் தெரிவித்து வரும் பிரான்ஸ் அதிபர் சிராக், பிரஸல்ஸ் நகரில் நடந்த ஐரோப்பியயூனியன் நாடுகள் கூட்டத்தில் மீண்டும் அமெரிக்கா- பிரிட்டனை எதிர்த்துப் பேசினார்.
இக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரும் சிராக்கும் கைகுலுக்கிக் கொண்டனர்.ஆனால், இருவரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை.
பெங்களூர், காசர்கோட்டில்..
பெங்களூரில் இரண்டாவது நாளாக இன்றும் போருக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. இதில் அமெரிக்கஅதிபர் ஜார்ஜ் புஷ்சின் உருவப் பொம்மை எரிக்கப்பட்டது.
அதே போல கேரள மாநிலம் காசர்கோட்டிலும் போருக்கு எதிராக கண்டனப் பேரணியும் பொதுக் கூட்டமும்நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
பங்களாதேஷில் பந்த்:
ஈராக் மீது தாக்குதலைக் கண்டித்து பங்களாதேஷில் இன்று நாடு தழுவிய பந்த் நடந்து வருகிறது. நாடு முழுவதும்கடைகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அரசு பஸ் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தோனேஷியா, ஆஸ்திரேலியாவிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications