ஏவுகணைத் தாக்குதலில் சதாம் படுகாயம்?

Subscribe to Oneindia Tamil

பாக்தாக்:

இரு தினங்களுக்கு முன் போர் தொடங்குதற்கு சில மணி நேரத்துக்கு முன் பாக்தாத் மீது அமெரிக்கா நடத்தியஏவுகணைத் தாக்குதலில் ஈராக் அதிபர் சதாம் ஹூசேன் பலத்த காயமடைந்திருக்கலாம் அல்லது இறந்தும்இருக்கலாம் என அமெரிக்கா கூறியுள்ளது.

சதாம், அவரது மகன்கள், மூத்த தளபதிகள் தெற்கு பாக்தாதில் ஒரு வீட்டில் இருப்பதாக உளவுப் பிரிவு கொடுத்ததகவலையடுத்து அந்த வீட்டைத் தாக்க அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உத்தரவிட்டார்.

இதையடுத்து வளைகுடாவில் உள்ள போர்க் கப்பலில் இருந்து டாமஹாக் ஏவுகணைகள் அந்த வீட்டை நோக்கிப்பாய்ந்தன. தொடர்ந்து அமெரிக்க எப்-117 போர் விமானங்களும் அந்த இடத்தில் தாக்குதல் நடத்தின.

இதில் சதாம் படுகாயமடைந்திருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா கருதுகிறது. ஆனால்,இதை உறுதி செய்ய முடியவில்லை என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். தாக்குதல் நடந்தவுடன்உடனடியாக மருத்து உதவிகள் கோரி ஈராக்கிய ராணுவத்தினரால் வயர்லெஸ்கள் மூலம் விடுக்கப்பட்டஅழைப்புகளையும் அமெரிக்கப் படைகள் இடைமறித்துக் கேட்டுள்ளனர்.

இதனால் சதாம் பலத்த காயமடைந்திருக்கலாம் என அமெரிக்கா கூறுகிறது. அல்லது இறந்தும் போயிருக்கலாம்.அவரது கண்காணிப்பில் இந்த போர் நடக்கிறதா என்பது சந்தேகமாக இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள்கூறுகின்றனர்.

ஆனால், இது முழுக்க முழுக்க திசை திருப்பும் செயல் என ஈராக்கிய செய்தித்துறை அமைச்சர் முகம்மத் சயீப் சகாப்கூறியுள்ளார். தாக்குதல் நடந்த இடத்தில் தான் சதாம் இருந்தார். ஆனால், அவர் காயம் ஏதுமின்றி தப்பிவிட்டார்என சகாப் தெரிவித்தார்.

அல் கஸ்ஸரில் தொடர்ந்து சண்டை:

அல் கஸ்ஸர் நகரைக் கைப்பற்றிவிட்டதாக பிரிட்டிஷ் படைகள் கூறினாலும் அங்கு தொடர்ந்து ஈராக்கியப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. நகரில் சில பகுதிகளில் ஈராக்கியப் படைகள் சரணடையை மறுத்துதொடர்ந்து மோதி வருகின்றன.

அதே போல பாஸ்ராவை நோக்கி முன்னேறி வரும் படைகளையும் ஈராக்கியப் படைகள் தீவிரமாகத் தாக்கிவருகின்றன. இதனால் நேற்று மட்டும் 150 கி.மீ. வரை ஈராக்குக்குள் புகுந்த அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள்இன்று வேகமாக முன்னேற முடியவில்லை.

தொடர்ந்து பீரங்கி சண்டை நடத்திய பின்னர் மெதுவாகத் தான் இந்தப் படைகள் முன்னேறி வருகின்றன.

சதாம் படங்கள் உடைப்பு:

முன்னதாக சப்வான் நகருக்குள் நுழைந்த அமெரிக்கப் படைகள் அங்கு வைக்கப்பட்டிருந்த சதாமின் மிகப் பெரியபடங்களை உடைத்தெரிந்தனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+