வட ஈராக்கில் ஊடுருவியது துருக்கிப் படை
அங்காரா:
அமெரிக்க-பிரிட்டன் படைகள் தெற்கு ஈராக்கில் சுமார் 150 கி.மீ. நுழைந்துவிட்ட நிலையில் வடக்கு ஈராக்குக்குள்துருக்கி நாட்டுப் படைகள் புகுந்துள்ளன. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தப் போரை முதலில் துருக்கி ஆதரிக்க மறுத்தது. தனது நாட்டு விமானத் தளங்களைப் பயன்படுத்தவும்அமெரிக்காவுக்கு அனுமதி தர மறுத்தது. ஆனால், பல பில்லியன் நிதியுதவி தருவதாக அமெரிக்காஉறுதியளித்ததால் தனது விமான தளங்களை அமெரிக்காவுக்குத் திறந்துவிட்டது.
இந் நிலையில் அமெரிக்காவே எதிர்பாராத வகையில் வடக்கு ஈராக்குக்குள் சுமார் 1,000 கமாண்டோ படைகளைதுருக்கி அனுப்பியுள்ளது. இந்தப் படைகள் ஈராக்கிய குர்து இனத்தினர் வசிக்கும் பகுதிகளில் நுழைந்துள்ளன.
ஈராக்கிலும் துருக்கியிலும் பெரும் அளவிலான குர்து இன மக்கள் வசித்து வருகின்றனர்.
தனது நாட்டு குர்து இனத்த்தினரை சதாம் ஹூசேன் கொலை செய்ய ஆரம்பித்தார். இதையடுத்து அவர்கள் துருக்கிஎல்லையை ஒட்டிய வடக்கு பகுதிக்கு நகர்ந்தனர். அங்கு அமெரிக்க உதவியுடன் குர்துஸதான் என்ற சுயாட்சிகொண்ட மாகாணத்தை உருவாக்கி வாழ்ந்து வருகின்றனர்.
துருக்கியிலும் குர்து இனத்தினருக்கும் அரசுக்கும் இடையே நல்லுறவு இல்லை. துருக்கி நாட்டு அரசும் குர்துஇனத்தினரை ஒடுக்கி வருகிறது. இதனால் குர்து இனப் போராளிகள் துருக்கி மீது அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகின்றனர்.
இப்போது ஈராக்கின் மீது அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதலுக்கு குர்து இனத்தினர் பெரும் ஆதரவு வழங்கிவருகின்றனர். போரில் ஈராக் தோல்வியடைந்தால் குர்து இனத்தினரின் கை ஓங்கும் என துருக்கி அஞ்சுகிறது.
இதைத் தடுக்க ஈராக்கின் குர்து இனப் பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள துருக்கி முயன்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாகவே ஈராக்குக்குள் துருக்கிப் படைகள் ஊடுருவி உள்ளன.
-->
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications