விமானத்துறை செயலாளர் குவைத் விரைவு: விமானங்கள் ரத்தாகுமா?
மும்பை:
ஈராக் போர் காரணமாக குவைத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து நேரில் அறிந்து வர இந்தியவிமானத்துறையின் செயலாளர் கே.ராய் பால் இன்று குவைத் நகருக்குச் சென்றார்.
போர் காரணமான விமானங்களுக்கு காப்பீட்டுக் கட்டணம் (war-risk insurance) மிக அதிகமாக செலுத்த வேண்டிஉள்ளதால் ஏர் இந்தியாவும், இந்தியன் ஏர்லைன்சும் குவைத் விமான சேவைகளை ரத்து செய்வது குறித்தும்யோசித்து வருவதாகத் தெரிகிறது.
போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில் குவைத் மக்களிடையே பெரும் பீதி நிலவுகிறது. ஆனால், பெரும்பாலானஇந்தியர்களிடையே நாடு திரும்பும் அவசரம் ஏதும் இல்லை.
சில ஆயிரம் பேர் ஊர் திரும்ப அவசரம் காட்டினாலும் பெரும்பாலான இந்தியர்கள் குவைத்தில் தங்கியிருப்பதால்பிரச்சனை இல்லை என்றே நினைக்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக நேற்று வழக்கமாக இயக்கப்பட்ட விமானத்தில்422 பேர் இந்தியா திரும்பியதோடு சரி. கூடுதல் விமானம் இயக்க வேண்டிய அவசியமே எழவில்லை.
இன்றும் கூட வழக்கமான ஒரு விமானம் தான் குவைத்தில் இருந்து இந்தியா வந்தது. காலையில் மும்பை வந்தஅந்த விமானத்தில் 14 கைக் குழந்தைகள் உள்பட 327 பேர் நாடு திரும்பினர். இந்த விமானத்தில் 80 சீட்கள்காலியாக வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் நிலைமையை நேரில் கண்டறிந்து வர விமானத்துறைச் செயலாளர் கே. ராய் பாலை மத்திய அரசுகுவைத்துக்கு அனுப்பியுள்ளது. அவர் குவைத் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.இதற்கிடையே போர் தொடர்பான காப்பீட்டுக் கட்டணம் மிக அதிகமாக இருப்பதால ஏர் இந்தியாவுக்கும்இந்தியன் ஏர்லைன்சுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருவதாகத் தெரிகிறது.
இதனால் விமான சேவைகளை ரத்து செய்யலாமா என்ற சிந்தனையில் விமானத்துறை உள்ளது. ஆனால், இதைபிரதமர் அனுமதிப்பாரா என்று தெரியவில்லை.
-->
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications