சென்னையில் காஸ் பலூன் ஏற்படுத்திய பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆராய்ச்சிக்காக வானிலை ஆராய்ச்சி நிலையம் அனுப்பிய பிரமாண்டமான காஸ் பலூன்சென்னையில் கீழே விழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை-பெசன்ட் நகர் பகுதியில் உள்ள கலாஷேத்ரா காலனியில் உள்ள பள்ளி மைதானத்தில் ஒருபிரமாண்டமான பலூன் விழுந்தது.
காஸ் நிரப்பிய பலூன் அது. இதைப் பார்த்த அப்பகுதி பொது மக்கள் பீதியடைந்தனர். உடனடியாகக்காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
போலீஸார் விரைந்து வந்து பலூனைக் கைப்பற்றி ஆராய்ந்தனர். அப்போது அது காலநிலை குறித்துஅறிந்து கொள்வதற்காக நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அனுப்பப்பட்டகாஸ் பலூன் என்று தெரிய வந்தது.
இதையடுத்துதான் மக்கள் நிம்மதி அடைந்தனர். அந்த பலூன் எப்படி கீழே விழுந்தது என்பதுகுறித்து வானிலை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
-->












Click it and Unblock the Notifications