அமெரிக்க "பேட்ரியாட்" ஏவுகணை தாக்கி 2 பிரிட்டிஷ் வீரர்கள் பலி
லண்டன்:
குவைத் எல்லையில் அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணைத் தாக்குதலில் 2 பிரிட்டிஷ் வீரர்கள்கொல்லப்பட்டனர்.
குவைத் எல்லையில் ஈராக் பகுதிக்குள் அமெரிக்கா விமானங்கள் பேட்ரியாட் ஏவுகணை மூலம்சராமாரியாகத் தாக்கி வருகின்றன.
அப்போது ஒரு பேட்ரியாட் ஏவுகணை தவறிப் போய் பிரிட்டிஷ் போர் விமானத்தைத் தாக்கியது.இதனால் அதிலிருந்து இரண்டு பிரிட்டிஷ் பைலட்டுகளுமே இறந்தனர்.
இந்த பிரிட்டிஷ் விமானத்தைத் தாங்கள்தான் சுட்டு வீழ்த்தியதாக ஈராக் முதலில் கூறியது.அதிலிருந்து பாராசூட்டில் குதித்துத் தப்பித்த பெண் பைலட் உள்ளிட்ட இரண்டு பிரிட்டிஷ்வீரர்களையும் கைது செய்திருப்பதாகவும் ஈராக் கூறியிருந்தது.
இந்நிலையில் அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணைதான் தவறுதலாக பிரிட்டிஷ் விமானத்தைத்தாக்கியதாகவும் அதிலிருந்த இரண்டு வீரர்களும் உயிரிழந்து விட்டதாகவும் பிரிட்டிஷ் ராணுவம்தற்போது தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஈராக் ஏவுகணை ஒன்றை பேட்ரியாட் ஏவுகணை மடக்கி அதைச் சிதறடிக்கச் செய்தது.ஆனால் ஈராக் ஏவிய அந்த ஏவுகணை ஸ்கட் ஏவுகணையா என்பது தெரியவில்லை.
கடந்த ஐந்து நாட்களாக நடந்து வரும் போரில் இத்துடன் ஈராக் மொத்தம் 13 ஏவுகணைகளைஏவியுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் நேற்றும் இரவு முழுவதும் பாக்தாத் மீது அமெரிக்க விமானங்கள் தொடர்ந்து குண்டுமழை பொழிந்துள்ளன.
-->












Click it and Unblock the Notifications