சிதறி கிடக்கும் அமெரிக்க வீரர்கள் உடல்களை காட்டியது ஈராக் டிவி
தோகா:
நசிரியா நகரில் கொல்லப்பட்ட அமெரிக்கப் படையினரின் உடல்களை ஈராக்கிய டிவி காட்டியது. மற்றஅனைத்துக் காட்சிகளையும் காட்டி வரும் சி.என்.என். உள்ளிட்ட அமெரிக்கத் தொலைக்காட்சிகளும் பி.பி.சியும்இந்தக் காட்சியை மட்டும் காட்டவில்லை.
ஆனால், அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ள கத்தார் நாட்டின் அரசுத் தொலைக்காட்சியான அல் ஜசீரா இந்தக்காட்சிகளை ஒளிபரப்பியது.
மேலும் பிடிபட்ட வீரர்களிடம் ஈராக்கிய அதிகாரிகள் விசாரணை நடத்தும் காட்சியும் காட்டப்பட்டது.பிடிபட்டவர்களில் ஒருவர் பெண் வீராங்கனை ஆவார்.
பிடிபட்டவர்களில் 2 பேருக்கு முகத்திலும் கைககளிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஈராக்கிய அதிகாரிகள்அடித்ததில் இவர்கள் காயமடைந்தார்களா அல்லது போர் முனையில் காயம்பட்டார்களா என்று தெரியவில்லை.
பிடிபட்ட அமெரிக்கப் போர்க் கைதிகளிடம் ஈராக்கிய தொலைக்காட்சி பேட்டியும் எடுத்தது. கண்களில்மிரட்சியுடன் அவர்கள் பதில் அளித்தைப் பார்க்க முடிந்தது.
இந் நிலையில் போர்க் கைதிகளிடம் பேட்டியை ஒளிபரப்பியதற்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சும், பிரிட்டிஷ்பிரதமர் டோனி பிளேரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது போர்க் கைதிகள் தொடர்பான ஜெனிவா ஒப்பந்தத்துக்கு எதிரானது என்றும் கைதிகளை மனிதாபிமானமுறையில் நடத்த வேண்டும் என்றும் புஷ் எச்சரித்தார்.
இதற்கு ஈராக்கிய துணை அதிபர் தாகா ரமதான் பதிலடி தந்துள்ளார். அவர் கூறுகையில், ஈராக்கிய வீரர்களைகையைக் கட்டியும், காலில் இருந்து ஷீக்களைப் பறித்து வெறும் காலுடன் நடக்க வைத்தும் அமெரிக்கத் தொலைக்காட்சிகள் காட்டி வருகின்றன. மேலும் ஐ.நா. விதிகளையே மீறி இந்த போரை அமெரிக்கா நடத்தி வருகிறது.அப்படி இருக்கையில் ஜெனிவா விதிகள் குறித்து அமெரிக்கா எப்படி பேசலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் போர்க் கைதிகள் மனிதாபிமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று அதிபர் சதாம் ஹூசேன்உத்தரவிட்டுள்ளதாகவும் அவர்கள் முறைப்படி தான் நடத்தப்பட்டு வருவதாகவும் ஈராக்கிய தொலைக்காட்சியில்ரமதான் தெரிவித்தார்.
5 கொல்லப்பட்ட வீரர்கள், 5 பிடிபட்ட வீரர்களை மட்டுமே ஈராக் டிவி காட்டியது. ஆனால், 10 வீரர்கள்கொல்லப்பட்டதாகவும் மேலும் 7 பேரைக் காணவில்லை எனவும் அமெரிக்க தெரிவித்துள்ளது. இதே போல தனதுபடையைச் சேர்ந்த 2 பேரைக் காணவில்லை என பிரிட்டனும் கூறியுள்ளது.
-->












Click it and Unblock the Notifications