அரசைத் தாக்கிப் பேசத் தயங்காத குமாரதாஸ்
சென்னை:
கிள்ளியூர் எம்.எல்.ஏவான டாக்டர் குமாரதாஸ் சமீபத்தில்தான் அதிமுகவில சேர்ந்த போதிலும்அரசின் குறைகளைப் பற்றி சட்டசபையில் தைரியமாகப் பேசினார்.
சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2003-04ம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதானவிவாதம் இன்று காலை தொடங்கியது.
அப்போது பேசிய குமாரதாஸ், "ஊனமுற்றவர்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்டுள்ள கருணைஇல்லங்களுக்கான நிதி உதவி ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. இதுகடுமையாகக் கண்டிக்கத்தக்கது. அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்றார்.
தமிழ் மாநில காமராஜ் காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விட்டு கடந்த வாரம்தான் குமாரதாஸ்அதிமுகவில் ஐக்கியமானார். இந்நிலையில் அதிமுக அரசையே தாக்குவது போல் பேச ஆரம்பித்துவிட்டாரே என்று அக்கட்சியைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் அதிர்ந்து போயினர்.
ஆனாலும் சமூக நலத் துறை அமைச்சரான வளர்மதி இதற்கு உடனடியாகப் பதில் கொடுத்தார்.குமாரதாசுக்குக் கிடைத்த தகவல்கள் தவறானவை என்றும் இது தொடர்பாக அவர் பேசியவற்றைஅவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வளர்மதி வலியுறுத்தினார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, "குமாரதாஸ் அதிமுகவைச் சேர்ந்தவர்தான்என்பதை சபாநாயகர் மூலமாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எதுவாக இருந்தாலும்குமாரதாஸ் எழுத்துப் பூர்வமாகவே அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்" என்றார்.
முன்னதாக, திமுகவை கடுமையாகச் சாடிப் பேசினார் குமாரதாஸ். "முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில்ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி போடப் போவதாக அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறினாரே,அவருடைய ஆட்சியில் அது செயல்படுத்தப்படவே இல்லையே. அது என்ன ஆயிற்று?" என்றுகேட்டார்.
இவ்வாறு குமாரதாஸ் பேசியதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "அதுஅண்ணாத்துரை முதல்வராக இருந்தபோதுதான் அமல்படுத்தப்பட்டது. அவரை அவமானப்படுத்தும்வகையில் குமாரதாஸ் பேசுகிறார். இதை அதிமுகவினரும் சபாநாயகரும் ஏற்றுக் கொள்கிறார்களா?"என்று திமுக எம்.எல்.ஏக்கள் கேட்டனர்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் காளிமுத்து, "குமாரதாஸ் சமீபத்தில்தான் தேசிய அரசியலிலிருந்துவிடுபட்டு வந்துள்ளார். மாநில நிகழ்வுகளில் அவருக்குச் சிறிது அனுபவம் தேவை. அதற்குக் காலஅவகாசமும் அவருக்குத் தேவைதான்" என்றார். அப்போது அவையே சிரிப்பலையில் மூழ்கியது.
இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு குமாரதாஸ் எதுவும் பேசவில்லை. ஒரே நேரத்தில் ஆளுங்கட்சிமற்றும் எதிர்க் கட்சிகளின் கோபத்திற்கு ஆளானார் குமாரதாஸ்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications