மீனாட்சி அம்மனை தரிசித்தார் நேபாள மன்னர்
மதுரை:
நேபாள மன்னரும் ராணியும் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினர்.அவர்களுக்காக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நேபாள மன்னர் ஞானேந்திரரும், அவருடைய மனைவியும் நேபாள ராணியுமான கோமல்ராஜலட்சுமி தேவியும் தமிழகத்தில் ஐந்து நாள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
நேற்று காஞ்சிபுரத்தில் சங்கர மடத்திற்கு விஜயம் மேற்கொண்ட நேபாள தம்பதியர் பின்னர்காமாட்சி அம்மன் கோவிலுக்கும் சென்று வழிபட்டனர்.
இந்நிலையில் இன்று காலை மதுரை வந்து சேர்ந்த அவர்களை மதுரை மாவட்ட கலெக்டர் டாக்டர்சந்திரமோகன் வரவேற்றார். பின்னர் நேபாள மன்னரும் ராணியும் மீனாட்சி அம்மன் கோவிலுக்குச்சென்றனர். அங்கு அவர்களுக்கு நாட்டுப்புறக் கலைஞர்கள் நடனமாடி பலத்த வரவேற்புஅளித்தனர்.
பின்னர் கோவிலுக்குள் சென்ற நேபாள மன்னருக்கும் ராணிக்கும் பூரண கும்ப மரியாதைஅளிக்கப்பட்டது. இதையடுத்து மீனாட்சி அம்மனை அவர்கள் தரிசனம் செய்தனர். அப்போதுமீனாட்சி அம்மனுக்கு வைரக் கிரீடம் சூட்டப்பட்டது. பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் அம்மனுக்கு வைரக் கிரீடம் சூட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நோபாள தம்பதியருக்காக மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனைகளும் பூஜைகளும்நடைபெற்றன. அவர்களும் பயபக்தியுடன் அம்மனை வழிபட்டனர். பின்னர் சுந்தரேஸ்வரர்சன்னிதிக்கும் சென்று அவர்கள் வழிபாடு செய்தனர்.
நேபாள மன்னருக்கு பிரசாதங்கள், பட்டு சால்வை, மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு குறித்தபுத்தகங்கள் ஆகியவை வழங்கப்பட்டன. பின்னர் கோவிலை விட்டுக் கிளம்புவதற்கு முன் நேபாளமன்னரும் ராணியும் பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications