அமெரிக்காவை வென்று காட்டுவோம்: சதாம் ஹூசேன் சவால்

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்:

Saddam hussainஅமெரிக்கப் படைகளை ஈராக்கிய வீரர்கள் கழுத்தை அறுத்துக் கொவார்கள்ை என அதிபர் சதாம் ஹூசேன்கூறினார்.

ஈராக்கிய டிவியில் இன்று அவர் மீண்டும் உரையாற்றினார். ராணுவ உடையில் அந் நாட்டு நேரப்படி பகல் 11.00மணிக்கு தனது நாட்டுத் தொலைக்காட்சியில் தோன்றிய அவர்,

அமெரிக்கப் படைகள் சாத்தான்கள். அந்த சாத்தான்களை ஒழித்துக் காட்டுவோம். வெற்றி எங்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது. நம் நாட்டை ஆக்கிரமிக்க முயலும் அமெரிக்கர்களுக்கு சாவு உறுதி. அவர்களது கழுத்தைஅறுத்துக் கொள்வோம்.

வீரர்களோடு சேர்ந்து நீங்களும் (மக்கள்) போராடுங்கள். அமெரிக்கர்களை ஆவேசத்துடனும் எதிர் கொள்ளுங்கள்.இறைவன் நம்மோடு இருக்கிறான். உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். பொறுமையுடன் இருங்கள்,வெற்றி உங்களைத் தேடி வந்து கொண்டிருக்கிறது.

உம் கஸ்ஸர் நகரைக் காக்க நமது படைகள் காட்டிய தீவிரம் பெருமை தருகிறது. ஜெட் விமானங்களும், இருநாட்டுப் படைகளில் ஆயிரக்கணக்கான டாங்கிகளும் கூட நம் வீரர்களை ஒடுக்க முடியவில்லை. அமெரிக்கப்படைகளை நமது படைகள் அங்கு முறியடித்துக் காட்டிவிட்டன.

இதே போல நாட்டின் அனைத்துப் பகுதிகளையும், நகர்களையும் நமது வீரர்கள் காப்பாற்றுவார்கள். உள்ளேநுழையும் எதிரிகளை நாம் சுற்றி வளைத்துத் தாக்குவோம். அந்தப் படைகளுக்கு நம் வீரர்கள் பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியதால் உங்களை மேலும் அதிகமான விமானங்களைக் கொண்டு தாக்குவார்கள். நீங்கள்கலங்கிவிடாதீர்கள் என்றார் சதாம்.

மேலும் ஒவ்வொரு பகுதியிலும் அமெரிக்கப் படைகளை எதிர்த்துப் போராடி வரும் ஈராக் படைகளின்கமாண்டர்களையும் பெயர்களைக் குறிப்பிட்டு சதாம் பாராட்டினார்.

போர் தொடங்கிய பின்னர் அவர் தொலைக்காட்சியில் உரையாற்றியது இது இரண்டாவது முறையாகும்.

ஏவுகணைத் தாக்குதலில் அவர் இறந்துவிட்டதாக முதலில் கூறிய அமெரிக்கா பின்னர் அந்தத் தகவலை உறுதிசெய்ய முடியவில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது. அவர் எங்கிருக்கிறார் என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந் நிலையில் ஈராக் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து உலகம் முழுவதும் போராட்டங்கள் தொடர்கின்றன. இன்றுஆஸ்திரேலியாவில் சுமார் 500 பேர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

பின்னர் அதிரடியாக நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற அவர்களை போலீசார் தண்ணீரைப் பீய்ச்சி அடித்துகலைத்தனர். ஈராக் போருக்கு எதிராக பிகார் சட்டப் பேரவையில் இன்று அனைத்துக் கட்சிகளும் கண்டனத்தீர்மானத்தை நிறைவேற்றின.

பஹ்ரைனில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போருக்கு எதிரான வன்முறையில் இறங்கினர். பல போலீஸ்வாகனங்களுக்கு அவர்கள் தீ வைத்தனர்.

அதே போல இந்தியாவின் லட்சத்தீவுகளிலும் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+