6 மாதங்களுக்கு தேவையான உணவு உள்ளது: ஈராக்
பாஸ்ரா:
பாஸ்ரா நகரில் நடந்து வரும் கடும் சண்டை காரணமாக அநத் நகரில் கடந்த இரு நாட்களாக மின்சார, தண்ணீர்,உணவு சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியாலும் நீர் இல்லாமலும் சாகும் நிலை உருவாகியுள்ளதாக ஐ.நாவும்ரெட்கிராஸ் அமைப்பும் எச்சரித்துள்ளன. இந் நகருக்கு உடனடியாக தண்ணீர் வினியோகத்தைத் தொடங்கவேண்டும் என ரெட்கிராஸ் கோரியுள்ளது.
இந் நகரில் செயல்பட தங்களுக்கு அனுமதி தர வேண்டும் என அமெரிக்கா மற்றும் ஈராக் அரசுகளுக்கு ஐ.நா.பொதுச் செயலாளர் கோபி அன்னான் கோரிக்கை விடுத்துள்ளார். தண்ணீர் சப்ளையையும் மின்வினியோகத்தையும் சீர் செய்ய தாங்கள் தயாராக இருப்பதாகவும் வேண்டிய பாதுகாப்பை மட்டும் வழங்குமாறும்ரெட்கிராஸ் கோரியுள்ளது.
அதே போல ஈராக்கில் போர் எதிர்பார்த்தைவிட அதிக நாட்கள் நீடிக்கும் என்பதால் மக்களுக்கு உணவுசப்ளையையும் தொடங்க வேண்டியது அவசியம் என கோபி அன்னான் கூறியுள்ளார்.
ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான இங்கு சுமார் 20 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
பிரிட்டிஷ் படை நுழைந்தது:
இந் நிலையில் பிரிட்டிஷ் படைகள் கடும் பதில் தாக்குதலுக்கு இடையிலும் பாஸ்ராவுக்குள் நுழைய பிரிட்டிஷ்படைகள் முயன்று வருகின்றன. தங்களுக்கு உயிர்ச் சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க முதலில் இந்த நகருக்குள்நுழைவதில்லை என பிரிட்டன் முடிவெடுத்திருந்தது.
ஆனால், அங்கு மனிதாபிமானத் தேவை இருப்பதால் அந் நகரைக் கைப்பற்றுவோம் என பிரிட்டன் கூறியுள்ளது.உள்ளே நுழைந்துவிட்டால் தண்ணீர், உணவு வினியோகத்தை நாங்களே தொடங்குவோம் என என பிரிட்டிஷ்படைகள் கூறியுள்ளன.
ஈராக் மறுப்பு:
நசிரியா, பாஸ்ரா மக்களிடையே உணவுப் பஞ்சம் ஏற்படவில்லை என்றும், இதுவும் அமெரிக்காவின் பொய்பிரச்சாரங்களில் ஒன்று என்றும் ஈராக் கூறியுள்ளது. அந்த நகர்களில் போதிய உணவு இருப்பதாகவும் மேலும்அதிக அளவிலான உணவுப் பொருள்கள் டிரக்குகள் மூலம் நேற்றிரவு அனுப்பப்பட்டதாகவும் ஈராக்கிய வர்த்தகஅமைச்சர் கூறியுளளார்.
பாஸ்ராவுக்குச் செல்லும் உணவு சப்ளைகளைக் கூட அமெரிக்கப் படைகள் தாக்கி வருகின்றன. அங்கு உணவுப்பஞ்சத்தை ஏற்படுத்த முயல்கின்றன என்றார்.
மக்களுக்கும் படைகளுக்கும் போதிய அளவில் சப்ளைகளை ஈராக் அனுப்பி வருவதாகவும், எங்களுக்குயாருடைய உணவும் உதவியும் தேவையில்லை என்றும் 6 மாதங்களுக்குத் தேவையான உணவு, மருந்துகளைநாங்கள் சேர்த்து வைத்துள்ளோம் எனவும் ஈராக் அமைச்சர் கூறினார்.
தப்புவாரா ஈராக் அமைச்சர்?
இந் நிலையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் கூடிய அரப நாடுகளின் கூட்டத்தில் ஈராக் போருக்கு கடும் எதிர்ப்புதெரிவிக்கப்பட்டது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உடனடியாகக் கூடி போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஈராக்கிய வெளியுறவுத்துறை அமைச்சர் நஜி சாப்ரியும் கலந்து கொண்டுள்ளார். அவர் மீண்டும்ஈராக்குக்குள் நுழையும்போது அமெரிக்க உளவுப் படைகளும் அவரைத் தொடர்வார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் சதாம் ஹூசேன் இருக்கும் இடத்தைக் கண்டறிய முடியும் என அமெரிக்கா கருதுகிறது.அமெரிக்காவின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அவர் எப்படி ஊர் திரும்பப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு பரவஆரம்பித்துள்ளது.
காண்ட்ராக்ட் வழங்குவதில் புஷ் தீவிரம்:
இதற்கிடையே ஈராக்கின் எண்ணெய் கிணறுகளை பராமரிப்பது, துறைமுகக் கண்காணிப்பு, உணவு வினியோகம்ஆகிய பணிகளுக்கு தனியார் நிறுவனங்களுக்கு காண்ட்ராக்ட் வழங்கும் பணிகளை அதிபர் புஷ்தொடங்கியுள்ளார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications