For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈராக்கிடம் அமெரிக்க செயற்கைக்கோள்களை குழப்பும் கருவிகள்!!

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

GPS Jammerஅமெரிக்க விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை திசை திருப்பும் ஜி.பி.எஸ். ஜாமர்ஸ் (GPS jammers)எனப்படும் அதி நவீன மின்னணுக் கருவிகள் ஈராக்கிடம் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தக் கருவிகளை ரஷ்யாவிடம் இருந்து ஈராக் வாங்கியுள்ளது. இதையடுத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைதொலைபேசியில் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

ஆனால், இது புடினுக்கே தெரியாமல் அமெரிக்காவுக்கு எதிரான ரஷ்ய ராணுவ அதிகாரிகளால் ஈராக்குக்குவிற்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஈராக்கிடம் 2,500 ஜி.பி.எஸ். ஜாமர்கள் இருக்கலாம் என்றுதெரிகிறது.

ரஷ்யாவின் பாதுகாப்பு நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஜி.பி.எஸ். ஜாமர்கள் சிகரெட் டப்பா விட கொஞ்சம்பெரியவை. ஆனால், அமெரிக்க விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் ரேடார்களில் எலெக்ட்ரானிக் குழப்பத்தைஏற்படுத்தும் திறன் கொண்டவை. எலெக்ட்ரானிக் ஜாமிங் என்று அழைக்கப்படும் இந்தத் தொழில்நுட்பம்எதிரிநாட்டுப் படைகளின் விமானங்கள, ஏவுகணைகளைகளை திசை திருப்பிவிடும்.

ஏவுகணைகள், குண்டுகள் ஆகியவற்றை ஏவியவுடன் அவற்றை அமெரிக்க செயற்கைக் கோள்கள் தங்கள்கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட இலக்கை நோக்கி அவற்றை வழிநடத்திச் செல்லும்.

ஆனால், இந்த ஜி.பி.எஸ். ஜாமர்கள் செயற்கைக்கோள்களுடன் இந்த ஏவுகணைகள் மற்றும் விமானங்களுக்குஉள்ள தொடர்பை குலைத்துவிடும். இதனால் ணீணூஞுஞிடிண்டிணிண குண்டுகளும் ஏவுகணைகளும் இலக்கை விட்டுவிட்டுவேறிடத்தில் போய் விழும்.

கடந்த சில நாட்களாக அமெரிக்கப் போர்க் கப்பல்களில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் ஈரான், துருக்கி,சிரியாவில் போய் விழுந்து வெடித்தன.

மேலும் பிரிட்டனின் விமானத்தை அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணையே தாக்கி அழித்தது. இரு பிரிட்டிஷ்ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்டு விழுந்தன.

இந்தச் சம்பவங்களுக்கும் ஈராக் வசம் இருக்கும் ஜி.பி.எஸ். ஜாமர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றுபாதுகாப்புத்துறை வல்லுனர்கள் கருதுகின்றனர். இது தவிர சில ஏவுகணைகளையும், விமான எதிர்ப்புபீரங்கிகளையும் கூட ரஷ்ய நிறுவனங்களில் இருந்து ஈராக் வாங்கியிருக்கலாம் என்று தெரிகிறது.

GPS Satelitesஅதிபர் ஜார்ஜ் புஷ்சின் செய்தித் தொடர்பாளர் ஆரி பிஸ்ஸர் நிருபர்களிடம் கூறுகையில்,

செயற்கைக்கோள்களுடனான தொடர்பை சிதறடிக்கும் கருவிகள், இரவு நேரத்தில் தாக்குதல் நடத்த உதவும் நைட்விஷன் கருவிகள் ஆகியவற்றை கடந்த சில ஆண்டுகளாகவே ஈராக்குக்கு ரஷ்யா வழங்கி வந்தது. இதை பலமுறைஅமெரிக்கா எதிர்த்து.

நேற்றும் கூட இது குறித்து புஷ் ரஷ்ய அதிபருடன் பேசினார். அப்போது இது குறித்து விசாரித்து விளக்கம்தருவதாக புடின் பதில் அளித்தார் என்றார் ஆரி பிஸ்ஸர்.

ரஷ்யா மறுப்பு:

ஆனால், புஷ்சின் செய்தித் தொடர்பாளர் இந்தக் குற்றச்சாட்டைக் கூறிய சிறிது நேரத்தில் ரஷ்ய அதிபரின் செய்தித்தொடர்பாளர் அலெக்சி குரோமோவ் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டார்.

அதில், ஈராக்குக்கு இந்த நவீன கருவிகளை ரஷ்யா விற்கவே இல்லை. இதை பலமுறை மறுத்துள்ளோம்.இப்போதும் மறுக்கிறோம். இது போன்ற ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கு இனி ரஷ்யா பதில் அளிக்காது.

இன்று பேசிய ஜார்ஜ் புஷ்சிடமும் இந்த பதிலைத் தான் புடின் வழங்கினார். மேலும் ஈராக்கில் பொது மக்கள்பலியாவதைத் தடுக்குமாறும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து அவசர உதவிகளையும் உடனே வழங்குமாறும்புஷ்சிடம் புடின் கேட்டுக் கொண்டார் என்றார்.

பென்டகன் விளக்கம்:

ஈராக்கிடம் ஜி.பி.எஸ். ஜாமர்கள் இருப்பதாகவும், ஆனால் இதுவரை அந்தக் கருவிகளால் எங்கள்செயற்கைக்கோள்களின் சிக்னல்களை தடுக்க முடியவில்லை எனவும் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமானபென்டகன் கூறியுள்ளது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X