இலங்கை: கடல் மோதல்களை தடுக்க தீவிர ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறாத வகையில் கடல் பகுதிகளில் விடுதலைப்புலிகளும் இலங்கைகடற்படையினரும் நடந்து கொள்வது குறித்து ராணுவ அதிகாரிகளும் கண்காணிப்புக் குழுஅதிகாரிகளும் பேச்சு நடத்தியுள்ளனர்.

வடக்கு இலங்கையில் உள்ள கடல் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் நடந்த சம்பவங்கள்அமைதிப் பேச்சுவார்த்தைகளையே பாதிக்கும் அளவுக்குக் கொண்டு சென்றுவிட்டன.

கடந்த பிப்ரவரி மாதம் ஜெர்மனியில் புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான ஐந்தாவது சுற்றுஅமைதிப் பேச்சுக்கள் தொடங்குவதற்குச் சற்று முன் நெடுந்தீவு கடல் பகுதியில் மூன்று கடற்புலிகள்தாங்கள் வந்த படகுகளைத் தகர்த்து தற்கொலை செய்து கொண்டனர்.

அந்தப் படகில் ஆயுதங்கள் இருந்ததா என்று இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர்சோதனை செய்ய முயன்றபோது இந்தச் சம்பவம் நடந்தது. இருந்தாலும் ஜெர்மன்பேச்சுவார்த்தைகள் சில தடுமாற்றங்களுடன் அமைதியாகவே நடந்து முடிந்தன.

இந்நிலையில் இந்த மாதம் 18ம் தேதி ஜப்பானில் ஆறாவது சுற்று அமைதிப் பேச்சுக்கள் தொடங்கின.இதற்குச் சரியாக எட்டு நாட்களுக்கு முன் யாழ்ப்பாணக் கடல் பகுதியில் மற்றொரு சம்பவமும்நிகழ்ந்தது.

புலிகளின் சரக்குக் கப்பல் ஒன்றை இலங்கைக் கடற்படையினர் தாக்கி அதை மூழ்கடித்தனர். இதில்கப்பலில் இருந்த 11 கடற்புலிகள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்தபுலிகள் பேச்சுவார்த்தைகளிலேயே கலந்து கொள்ளப் போவதில்லை என்று முதலில் முடிவு செய்தனர்.

இருந்தாலும் அமைதியில் நம்பிக்கை கொண்டு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் புலிகள் கலந்துகொண்டனர். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொள்ளாமல் கவனமுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று இரு தரப்பினரும் முடிவு செய்தனர்.

ஈராக் போர் காரணமாக ஜப்பான் பேச்சுக்கள் பாதியிலேயே நிறைவடைந்தாலும், இந்தப்பேச்சுவார்த்தை சுமூகமாகவே நடைபெற்று முடிந்தன.

ஆனாலும் ஜப்பான் பேச்சுக்கள் முடிந்த தினமான கடந்த 21ம் தேதி வடக்கு இலங்கை கடல் பகுதியில்மற்றொரு சம்பவமும் நிகழ்ந்து விட்டது. 15 சீனர்களும், இலங்கையைச் சேர்ந்த இரண்டு பேரும்வந்த ஒரு மீன்பிடிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

இதில் அந்தக் கப்பலில் இருந்த 17 பேரும் உயிரிழந்து விட்டனர். இந்தக் கப்பலை புலிகள்தான்தாக்கி மூழ்கடித்ததாகப் புகார் கூறப்பட்டது. ஆனால் புலிகள் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

வடக்கு இலங்கை கடற்பகுதிகளில் நடைபெற்ற இந்த மூன்று சம்பவங்களும் அமைதிப்பேச்சுவார்த்தைகளைக் குலைத்து விடுமோ என்று அச்சம் தற்போது எழுந்துள்ளது.

இந்நிலையில் கடற்பகுதிகளில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இலங்கை ராணுவஅதிகாரிகளும் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு அதிகாரிகளும் நேற்று பேச்சு நடத்தியுள்ளனர்.

கடற்பகுதிகளில் புலிகளும், இலங்கை கடற்படையினரும் நடந்து கொள்ள வேண்டியவை குறித்துஇந்தக் கூட்டத்தில் தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டது.

வடக்கு இலங்கை கடற்பகுதிகளில் கண்காணிப்புக் குழுவினரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்,அங்கு நடமாடும் படகுகள் அல்லது கப்பல்கள் கண்காணிப்புக் குழுவினரிடம் சரியானதகவல்களை அளிக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தற்போது இந்தப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும்ஸ்வீடன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 46 பேர் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+