அமெரிக்க- பிரிட்டன் படைகளை தாக்கும் ஈராக் மக்கள்
பாக்தாத்:
சதாம் ஹூசேனிடம் இருந்து ஈராக்கை விடுவிக்கப் போவதாகக் கூறிக் கொண்டு தாக்குதல் நடத்தி வரும்அமெரிக்க- பிரிட்டிஷ் படைகளை அந்த நாட்டு மக்களும் சேர்ந்து தாக்குவது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஈராக்கிய வீரர்களுடன் சேர்ந்து கொண்டு பல்வேறு போராளிக் குழுக்களும் பொது மக்களும் சாதாரண உடையில்கொரில்லா தாக்குதல் நடத்த ஆரம்பித்திருப்பது அமெரிக்க- பிரிட்டிஷ் ராணுவ நிபுணர்கள் இடையே பெரும்ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் உடனடியாக ஈராக்குக்குள் பெரும் அளவில் உணவு சப்ளையைத் தொடங்க அமெரிக்கா முடிவுசெய்துள்ளது. உணவு மற்றும பிற வகையான அடிப்படைத் தேவைகளை வழங்கி மக்கள் ஆதரவைத் திரட்டும்முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
இதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்திடம் அதிபர் ஜார்ஜ் புஷ் 75 பில்லியன் டாலர் நிதி கோரியுள்ளார். இதில்சுமார் 15 பில்லியன் டாலர்களை ஈராக்கிய மக்களுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரபயன்படுத்தப் போவதாக அவர் கூறியுள்ளார்.
பாக்தாதில் தாக்குதல் தொடர்கிறது:
தலைநகர் பாக்தாதை நோக்கி முன்னேறி வரும் படைகளுக்குத் துணையாக, ஈராக்கிய வீரர்களை சீர் குலைக்க அந்தநகரின் மீது மிகக் கடுமையான விமானத் தாக்குதல் நடந்து வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடங்கிய பயங்கர குண்டுவீச்சுத் தாக்குதல் தொடர்கிறது. நேற்றிரவும் இன்றுகாலையும் பாக்தாதை நூற்றுக்கணக்கான குண்டுகள் தாக்கின.
இந்த நகரைக் காத்து வரும் ரிபப்ளிகன் படைகள் மீது ஏவுகணைகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாகதெற்கு பாக்தாதின் மீது நேற்றிரவு முதல் தொடர்ந்து ஏவுகணைகள் வந்து விழுந்தவண்ணம் உள்ளன.
ஆனால், பாக்தாதைச் சுற்றி ஈராக்கிய போலீசாரின் உதவியுடன் ராணுவத்தினர் ஆயிரக்கணக்கான பதுங்குகுழிகளை அமைத்து வருகின்றன. இந்த நகரில் நுழையும் அமெரிக்க- பிரிட்டிஷ் படைகளுக்கு பெரும் உயிர்ச்சேதத்தை விளைவிக்க ஈராக்கியப் படைகள் முயன்று வருகின்றன.
அதே போல நாட்டின் வட பகுதியில் உள்ள கிர்குக் நகரில் உள்ள ஈராக்கியப் படைகள் மீதும் குண்டுவீச்சுத்தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
நசிரியாவின் முக்கியத்துவம்:
இதற்கிடையே நசிரியாவில் அமெரிக்க- ஈராக் படைகளுக்கு இடையே கடும் மோதல் தொடர்ந்து வருகிறது. இந்தநகரைப் பிடிக்க வேண்டியது அமெரிக்கப் படைகளுக்கு மிக அவசியமாகும். பாக்தாத் நோக்கிச் செல்லும் தனதுபடைகளுக்கு தரைவழியான ஆயுத, எரிபொருள், உணவு சப்ளையை தொடர வேண்டுமானால் இந்த நகரைஅமெரிக்கா பிடித்தே ஆக வேண்டும்.
அதே நேரத்தில் இந்த நகரை காப்பாற்றிவிட்டால் அமெரிக்கப் படைகளின் தாக்குதல் திறனை பல மடங்குகுறைத்துவிட முடியும் என ஈராக் கருதுகிறது. இதனால் இந்த நகரில் தொடர்ந்து இரு தரப்பினரும் கடும்தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
தாக்குதலை தவிர்த்த போர் கப்பல்:
இதற்கிடையே வளைகுடா கடல் பகுதியில் புயல் காற்று வீசியதால் அமெரிக்கப் விமானம் தாங்கி போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். தியோடர் ரூஸ்வெல்ட் தனது தாக்குதலை நிறுத்திக் கொண்டுள்ளது. இதனால் இந்தக்கப்பலில் இருந்து ஏவுகணைகள் செலுத்தப்படவில்லை. போர் விமானங்களும் தாக்கச் செல்லவில்லை.
-->
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications