நாளை கறுப்பு பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு வர திமுகவினர் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக அரசின் ஜனநாயக விரோத செயலைக் கண்டித்து நாளை திமுக உறுப்பினர்கள் கறுப்புச் சின்னம் அணிந்துசட்டசபைக்குச் செல்வார்கள் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சட்டசபையில் இன்று திமுக இளைஞரணி செயலாளர் ஸ்டாலின், சட்டசபை திமுக தலைவர் துரைமுருகன்உள்ளிட்டவர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர் இது குறித்து அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம்கருணாநிதி கூறுகையில்,

முதல்வர் பேசுவதற்கு விளக்கம் அளிக்க எதிர்க் கட்சித் தலைவர் அன்பழகனுக்கு அனுமதி மறுக்கப்படுகிறதுஎன்றால் எந்த அளவுக்கு ஜனநாயகத்தை அதிமுகவினர் மதிக்கிறார்கள் என்பது தெரியும்.

சபையில் மக்கள் பிரச்சினைகள் குறித்துப் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. மீறிப் பேச எதிர்க் கட்சிகள் முயன்றால்"டைவர்ஷன்" செய்வது போல அவர்களை இவ்வாறு வெளியேற்றுகிறார்கள்.

இந்தச் செயல்களுக்கு நடுநிலை வகிக்க வேண்டிய சபாநாயகர் காளிமுத்துவும் துணை போகிறார். அவரிடமிருந்துஇப்படி ஒரு ஒருதலை பட்சமான நடவடிக்கையை நான் எதிர்பார்க்கவே இல்லை. இது வேதனை தருவதாகஉள்ளது.

இந்த ஜனநாயக விரோத செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். சபையிலிருந்து திமுக உறுப்பினர்கள்வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து நாளை (வியாழக்கிழமை) திமுக எம்.எல்.ஏக்கள் கறுப்புச்சின்னம் அணிந்து சபைக்கு செல்வார்கள் என்றார் கருணாநிதி.

"நீங்கள் சட்டசபைக்கு வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று ஆளும் கட்சியினர் அடிக்கடி கூறி வருகிறார்களே?"என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு கருணாநிதி பதிலளிக்கையில்,

இன்று சட்டசபையில் நடந்த சம்பவங்களைப் பார்த்திருப்பீர்கள். இன்னும் சொல்லப் போனால் என்னைத்தாக்குவதற்காகத்தான் சட்டசபைக்கு வரச் சொல்கிறார்கள்.

கடந்த 1989ல் நான் முதல்வராக இருந்தபோது பட்ஜெட் படிக்கையில் என்னைக் கத்தியால் குத்த ஏற்பாடுகள்நடந்ததாக உளவுத் துறை மூலம் எனக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவசர அவசரமாக என் நெஞ்சு வரை உயரம் கொண்ட ஒரு டேபிள் செய்யப்பட்டது. அதில்தான்நான் பட்ஜெட்டை வாசித்தேன். இப்போதும் அந்த டேபிளைப் பயன்படுத்திதான் நிதி அமைச்சர் பொன்னையனும்அறிக்கை படித்தார் என்றார் கருணாநிதி.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+