அல்-நஜாப் நகரில் 650 ஈராக்கிய வீரர்கள் பலி
வாஷிங்டன்:
அல்- நஜாப் நகரில் அமெரிக்கப் படைகளுக்கும் ஈராக்கிய ராணுவத்தினருக்கும் இடையே நடந்த பயங்கர மோதலில் 650 ஈராக்கியவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனாலும் அந் நகரில் தொடர்ந்து ஈராக்கியப் படைகள் தீவிரமாக போரிட்டு வருகின்றன.
ஈராக்கிய வீரர்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து பல்வேறு தரப்பில் இருந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஈராக்கிய வீரர்கள்ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தியதில் அமெரிக்காவின் 7வது கேவல்ரி ரெஜிமென்ட் படையின் சில டாங்கிகள் சேதமடைந்தன. பலஅமெரிக்க வீரர்களும் காயமடைந்தனர் என பென்டகன் கூறியுள்ளது.
இதற்கிடையே கடும் புழுதிப் புயல் காரணமாக மேலும் முன்னேற முடியாமல் அமெரிக்க- பிரிட்டிஷ் படைகள் நேற்று முழுவதும்பாலைவனத்திலேயே நின்றிருந்தன. பகல் முழுவதுமே எந்த முன்னேற்றமும் இல்லை. இரவும் புழுதிப் புயல் தொடர்ந்தது. இதனால்ஹெலிகாப்டர்களைக் கொண்டும் தாக்குதல் நடத்தப்படவில்லை.
இதனால் பாக்தாத் நோக்கி நேற்று அமெரிக்கப் படைகள் முன்னேறவில்லை. ஆனால், பாக்தாத் நகரின் மீது அதிக சக்தி வாய்ந்த குண்டுகளைஅமெரிக்க- பிரிட்டிஷ் விமானங்கள் நேற்றிரவும் இன்று காலையும் வீசின.
அமெரிக்காவின் 3வது இன்பான்ட்ரி பிரிவு பாக்தாதுக்கு 100 கி.மீ. தொலைவில் கர்பலா அருகே நேற்றிரவு நிலை கொண்டிருந்தது. இன்றுகாலை அந்தப் படை மெதுவாக பாக்தாத் நோக்கி முன்னேற ஆரம்பித்துள்ளது.
அதே போல ஈராக்கின் தென் மேற்கில் இருந்து அமெரிக்காவின் 101வது ஏர்பார்ன் டிவிஷன் படைப் பிரிவுவும், கிழக்கில் இருந்து மெரைன்படையினரும் பாக்தாதை நோக்கி முன்னேறி வருகினறனர்.
அதே நேரத்தில் வடக்கு ஈராக்கில் அல்-கொய்தா தீவிரவாத அமைப்புகளின் முகாம்கள் இருப்பதாகக் கூறி அங்கும் அமெரிக்கா இன்றுகாலை டாமஹாக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது.
3,500 ஈராக்கிய வீரர்கள் கைது:
இந் நிலையில் ஈராக்கின் பல்வேறு இடங்களிலும் இதுவரை 3,500 வீரர்களை தங்களது படைகள் கைது செய்துள்ளதாக அமெரிக்கபாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் கூறினார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications