பாஸ்ராவில் நுழைய தயங்கும் அமெரிக்க- பிரிட்டிஷ் படைகள்

Subscribe to Oneindia Tamil

பாஸ்ரா:

பாஸ்ரா நகரைக் கைப்பற்ற கடும் சண்டை தொடர்ந்து கொண்டுள்ளது.

இந்த நகரைக் கைப்பற்ற முயன்று வரும் அமெரிக்க- பிரிட்டிஷ் படைகள் உயிர்ச் சேதத்துக்கு அஞ்சி இன்னும் உள்ளே நுழையவில்லை.புறநகர் பகுதியில் இருந்தபடி தான் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இங்கு சதாம் பிதாயீன் எனப்படும் போராளிக் குழுவினர் மட்டும் 1,000 பேர் இருப்பார்கள் என்று தெரிகிறது. மேலும் அதிபர் சதாம்ஹூசேனின் பாத் கட்சியின் தொண்டர்களும் ஆயுதங்களுடன் உள்ளனர்.

இதனால் ஈராக்கிய வீரர் யார், பொதுமக்கள் யார் என்று புரியாமல் அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள் குழம்பி வருகின்றன. உள்ளேநுழைந்தால் நசிரியா நகரில் ஏற்பட்டது போன்ற கடும் உயிர்ச் சேதம் ஏற்படும் என இந்தப் படைகள் கருதுகின்றன.

இதனால் இந்த நகரில் உள்ள ஷியா இனத் தலைவர்களை அழைத்துப் பேசி வருகின்றன இப் படைகள். ஈராக்கிய படைகளுக்கு எதிராகபோராட்டத்தைத் துவக்குமாறும், உங்களுக்கு எங்கள் ஆதரவு உண்டு என்றும் நம்பிக்கை தந்து வருகின்றனர்.

இதனால் சில இடங்களில் ஈராக் ராணுவத்துக்கு எதிரான பாஸ்ரா நகருக்குள் போராட்டங்களும் தொடங்கின. ஆனால், அந்தப்போராட்டக்காரர்களை ஈராக்கிய ராணுவத்தினரும் பாத் கட்சித் தொண்டர்களும் சுட்டுக் கொன்று வருகின்றனர்.

இவர்களைக் காப்பதாக உறுதியளித்த பிரிட்டிஷ்- அமெரிக்கப் படைகள் நகரில் வெளியே இருந்தபடி தாக்குதல் நடத்தி வருகின்றன. 1991ம்ஆண்டில் முதல் ஈராக் போர் நடந்தபோது இந்த ஷியா நகர மக்கள் அமெரிக்காவை நம்பி சதாமுக்கு எதிரான போராட்டத்தில் குதித்தனர்.

ஆனால், அமெரிக்கா கைவிட்டுவிட்டது. இதனால் போர் முடிந்தவுடன் இந்த நகருக்குள் வந்த ஈராக்கிய ராணுவம் ஆயிரக்கணக்கானமக்களை கொன்று குவித்தது. அன்று முதல் இந்த நகர மக்களை சதாமின் படைகள் நம்பியதே இல்லை. தொடர்ந்து தனது பாத் கட்சித்தொண்டர்களை ஆயிரக்கணக்கில் இந்த நகரில் தங்க வைத்து மக்களை கட்டுக்குள் வைத்திருந்தார் சதாம்.

இப்போது சதாமுக்கு எதிராக மீண்டும் இந்த நகர மக்கள் போராட முன் வந்திருப்பதாக பிரிட்டிஷ் படைகள் கூறியுள்ளன. இந்த நகரமக்களுக்கு தண்ணீர், உணவு சப்ளையை விரைவில் தொடங்குவோம். அதற்காக இந்த நகரை மிக விரைவில் பிடிப்போம் என பிரிட்டிஷ்படைகள் கூறியுள்ளன.

இப்போது தங்கள் வசம் உள்ள பாஸ்ராவின் புற நகர் பகுதிகளில் மக்களுக்கு பிரிட்டிஷ் படைகள் உணவு, மருந்துகளை வழங்கி வருகின்றன.தங்களுக்கு எதிராக கிளம்பியுள்ள தங்கள் மக்களையே ஈராக்கிய வீரர்கள் கொன்று குவித்து வருகின்றனர் என பிரிட்டிஷ் படைகள்கூறியுள்ளன.

ஆனால், இதை ஈராக் மறுத்துள்ளது. இது மக்களைக் குழப்ப பிரிட்டிஷ்- அமெரிக்கப் படைகள் மேற்காண்டுள்ள போர் தந்திரம் தான் இதுஎன ஈராக்கிய ரேடியோ கூறியுள்ளது. இதையே தான் கத்தார் நாட்டின் அல் ஜசீரா தொலைக் காட்சியும் கூறுகிறது. அங்கு மக்கள் யாரும்தெருக்களில் இறங்கிப் போராடுவதைப் பார்க்க முடியவில் என இந்தத் தொலைக்காட்சி கூறியுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+