சிவகாசி அருகே 9 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள பாரைப்பட்டி கிராமத்தில் பட்டாசுத் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த 9 குழந்தைதொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
பாரைப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏராளமான குழந்தை தொழிலாளர்கள் வேலைபார்த்து வருவதாக மாவட்ட வருவாய் அதிகாரி (ஆர்.டி.ஓ.) சோமசுந்தரம், டி.எஸ்.பி. ராஜாங்கம் ஆகியோருக்குத்தகவல் வந்தது.
இதையடுத்த அங்கு விரைந்த அதிகாரிகள் 7 முதல் 15 வயதுக்குட்பட்ட ஒன்பது சிறுவர்கள் வேலை பார்த்துவருவதைக் கண்டறிந்தனர். பின்னர் அவர்களை அதிகாரிகள் அங்கிருந்து மீட்டனர்.
மேலும் அனுமதி இல்லாமல் வேறொரு இடத்திலும் இதே நிறுவனம் பட்டாசு தயாரித்து வருவதும் தெரிந்தது.இதைத் தொடர்ந்து அந்த இடத்திலிருந்து ஆறு பேரல் வேதிப் பொருட்கள், 14 பெட்டி பட்டாசுகள்கைப்பற்றப்பட்டன.
-->












Click it and Unblock the Notifications