ஈராக் போர், காஷ்மீர் படுகொலைகளுக்கு தமிழக சட்டசபை கண்டனம்
சன்னை:
ஈராக் மீதான அமெரிக்க தாக்குதல், காஷ்மீரில் 24 இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஆகியவற்றுக்குதமிழக சட்டசபையில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஈராக் போரை நிறுத்துவதற்கு வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும் என்றும் சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
எந்த ஒரு உருப்படியான காரணமும் இல்லாமல் ஈராக்கில் நுழைந்து அமெரிக்கப் படைகள் தாக்குவதைக் கண்டித்துசபாநாயகர் காளிமுத்து கொண்டு வந்த இந்தத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டனர்.
இந்தப் போரினால் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
காஷ்மீர் சம்பவம்...
அதேபோல் நேற்று முன்தினம் காஷ்மீரில் தீவிரவாதிகள் 24 அப்பாவி இந்துக்களைச் சுட்டுக் கொன்றதைக்கண்டித்தும் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானத்தில்,
இந்தப் படுகொலைச் சம்பவத்தின் மூலம் நாம் நவீன யுகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா, அல்லதுகற்காலத்துக்குச் சென்று விட்டோமா என்ற சந்தேகம்தான் எழுகிறது.
இது ஒரு மனிதத் தன்மையற்ற கொடுஞ்செயல். அப்பாவி உயிர்களைக் கொல்வதற்கு பயங்கரவாதிகள் எந்தஅளவுக்கும் கொடூரமாகச் செயல்படுவார்கள் என்பதை இந்தப் படுகொலைகள் காட்டுகின்றன.
எந்த ஒரு பிரச்சனைக்கும் பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு காண முடியும். இப்படி அப்பாவி மனிதர்களையும்,பெண்களையும், குழந்தைகளையும் கொல்வதால் தீர்வு காணவே முடியாது. உயிரிழந்தவர்களுக்கு தமிழகமக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசுமேற்கொள்ள வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications