குஜராத் முதல்வரின் எதிர்ப்பாளர் சுட்டுக் கொலை
அகமதாபாத்:
குஜராத் மாநில முன்னாள் அமைச்சரும் முதல்வர் நரேந்திர மோடியின் எதிர்ப்பாளருமான ஹரேன் பாண்ட்யா இன்று காலை சுட்டுக்கொல்லப்பட்டார்.
குஜராத்தின் மூத்த பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான பாண்ட்யா கேசுபாய் படேல் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தார்.ஆனால், நரேந்திர மோடி முதல்வரானவுடன் இவரை அந்த முக்கியப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு வருவாய்த்துறை அமைச்சராக்கினார்.
கடந்த தேர்தலில் பாண்ட்யாவுக்கு சீட் தரக் கூட மோடி மறுத்துவிட்டார். குஜராத்தில் முஸ்லீம்கள் திட்டமிட்டுக் கொல்லப்பட்டபோது அதில்முதல்வருக்கு தொடர்பு இருந்ததாக பாண்ட்யா பத்திரிக்கைகளுக்கு தகவல் தந்ததாக மோடியின் ஆதரவாளர்கள் இவர் மீது புகார் கூறிவந்தனர்.
இன்று காலை அகமதாபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து சிறிது தொலைவில் உள்ள பூங்காவுக்கு இவர் சென்றார். உடல் பயிற்சியைமுடித்துவிட்டு காரில் ஏறிய இவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிவிட்டனர்.
மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த முதல்வர் நரேந்திர மோடியை, ஹரேன் பாண்ட்யாவின்ஆதரவாளர்கள் ஆவேசத்துடன் தடுக்க முயன்றனர். மோடிக்கு எதிராகவும் அவர்கள் கோஷம் எழுப்பினர். மோடிக்கு மட்டும் எதற்குகமாண்டோ படை? எங்கள் தலைவருக்கு ஏன் பாதுகாப்புத் தரவில்லை என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
குஜராத்தில் சட்டம்-ஒழுங்கை நரேந்திர மோடி கெடுத்து குட்டிச்சுவராக்கிவிட்டாக ஹரேன் பாண்ட்யாவின் பெற்றோர்களும் குற்றம்சாட்டினர். இந்த சாவுக்கு மோடி தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர்கள் கூறினர்.
பாண்ட்யாவின் மறைவுக்கு பிரதமர் வாஜ்பாய் ஆழ்ந்த இரங்கலும் அதிர்ச்சியும் தெரிவித்துள்ளார்.
இவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க துணைப் பிரதமர் அத்வானி, பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு ஆகியோர் குஜராத்விரைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications