ஈராக்குக்கு உதவும் பாலைவனப் புயல்
பாக்தாத்:
பாக்தாதை மிக பயங்கரமான சூறாவளி சூழ்ந்து கொண்டுள்ளது. இதனால் மணலும் புழுதியும் பரவியுள்ளது. ஏற்கனவே ஈராக்கிய படைகள்வைத்த தீயால் எண்ணெய் கிணறுகளும் எரிந்து கரும் புகையைக் கக்கி வருகின்றன.
இதனால் ஈராக்கிய தலைநகர் ஒரே மணல், தூசி, கரும்புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.
பாத்காதின் தெற்கிலும் இந்த மணல் புயல் வீசி வருகிறது. இதனால் அமெரிக்க- பிரிட்டிஷ் தரைப் படைகளின் முன்னேற்றம் அடியோடுபாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் படைகளுக்குத் துணையாக ஹெலிகாப்டர்களும் பறக்க முடியாத அளவுக்கு தூசிப் புயல் காற்று உள்ளது.
பாக்தாதில் கடந்த பல ஆண்டுகளில் இதுபோன்ற புயல் காற்று எழும்பியதே இல்லை என்று கூறப்படுகிறது. கார்கள், வீடுகள், கட்டங்கள்ஸமரங்கள், டைகிரிஸ் ஆறு ஆகிய அனைத்தின் மீதும் தூசிப் படலம் பரவியுள்ளது.
எதிரே சில மீட்டர் தொலைவில் உள்ளவரைக் கூட பார்க்க முடியாத அளவுக்கு இந்தத் தூசியின் அடர்த்தி உள்ளது.
பாக்தாதின் மீது தொடர்ந்து கடும் குண்டு வீச்சுத் தாக்குதல் நடந்து வருகிறது. அந் நகரைப் பாதுகாத்து வரும் அதிபர் சதாம் ஹூசேனின்ரிபப்ளிகன் படைகளைக் குறி வைத்து இத் தாக்குதல் நடக்கிறது.
தெருக்களில் காலை வைத்தால் அச்சு படியும் அளவுக்கு தூசிப் படலம் உள்ளது.
இதனால் பாக்தாதுக்குள் நுழைய வந்து கொண்டிருக்கும் படைகள் வழியிலேயே பாலைவனத்தில் நின்று கொண்டுள்ளன. இந்தத் தூசிப்புயல் ஈராக்கியர்களுக்கு பழக்கமானது என்பதால் அந் நாட்டின் படைகள் சிறு குழுக்களாக அமெரிக்கப் படைகளை நோக்கி முன்னேறிவருகின்றன.
இந்தக் குழுக்களைத் தாக்க ஹெலிகாப்டர்கள் கூட பறக்க முடியாத அளவுக்கு தூசிப் புயல் உள்ளது.
அதே நேரத்தில் பாக்தாத் நகர் மீது ஏவுகணைத் தாக்குதல் மிகத் தீவிரமாக உள்ளது. இன்று மட்டும் சுமார் 40 டாமஹாக் ஏவுகணைகள்பாக்தாதைத் தாக்கியதாக யு.எஸ்.எஸ். கிட்டிஹாக் விமானம் தாங்கிக் கப்பலின் கமாண்டர் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் ஈராக்கின் தென் மூலையில் உள்ள உம் கஸ்ஸர் நகரின் முக்கிய பகுதிகள் தங்கள் வசம் வந்துவிட்டதாக பிரிட்டிஷ் படைகள்கூறியுள்ளன.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications