இந்தியா, பாகிஸ்தான் ஏவுகணைகள் சோதனை
பலசூர் (ஒரிசா):
தரையிலிருந்து தரையில் பாய்ந்து சென்று தாக்குத் திறன் வாய்ந்த இந்தியாவின் பிருத்வி ரக ஏவுகணை இன்றுவெற்றிகரமாகப் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தானும் இன்று அப்தாலிஏவுகணையை ஏவி சோதனை செய்தது.
ஒரிசாவின் சந்திப்பூர் கடலில் அமைந்துள்ள சோதனைத் தளத்திலிருந்து பிருத்வி ஏவுகணை காலை 11.30 மணிக்குஏவப்பட்டது.
சுமார் 8.5 மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் தடிமனும் கொண்ட இந்த ஏவுகணை தன்னுடைய இலக்கைச் சரியாகத்தாக்கியது.
ஒரு டன் எடையுள்ள வெடிபொருட்களைச் சுமந்து செல்லும் திறன் வாய்ந்த இந்த பிருத்வி ஏவுகணை முழுக்கமுழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. சுமார் 40 கி.மீ. தொலைவுக்குச் சென்று தாக்கும் திறன் பெற்றது இது.
ஆனாலும் சுமார் 150 கி.மீ. தூரத்திற்குச் சென்று தாக்கும் வகையில் பிருத்வி ஏவுகணையின் தொழில்நுட்பம்மேம்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சித் துறையினர் (டி.ஆர்.டி.ஓ.) நடத்தும் வழக்கமான சோதனைதான் இன்றும் நடைபெற்றதாகபாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 1988ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதியிலிருந்து இன்று வரை மொத்தம் 16 முறை பிருத்வி ஏவுகணைபரிசோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானும்...
இதற்கிடையே பாகிஸ்தானும் இன்று தன்னுடைய அப்தாலி ஏவுகணையை ஏவி பரிசோதனை செய்து பார்த்தது.
அணு ஆயுதங்களையும் ஏந்திச் செல்லும் திறன் வாய்ந்த இந்த ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டதுஎன்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளரான அஸிஸ் அகமது கான் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications