ராஜாராமன் மீது 6 கொலை, 9 வெடிகுண்டு வழக்குள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் போலீசார் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயன்று சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் தீவிரவாதிராஜாராமன் மீது 6 கொலை வழக்குகளும், 9 வெடிகுண்டு வழக்குகளும் உள்ளன.

தேனி மாவட்டம் சீலையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜாராமன், திருச்சியில் பி.எஸ்சி. பட்டமும் பின்னர் மதுரைகாமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டமும் பெற்றவர்.

தமிழ் நக்சலைட் இயக்கங்கள் மீது மிகவும் ஈடுபாடு கொண்டிருந்த அவர் தமிழர்கள் மீட்புப் படை என்றஅமைப்பில் சேர்ந்தார். பின்னர் அதிலிருந்து விலகி தமிழர் விடுதலைப் படை என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன்தலைவரானார்.

சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் அவருக்குச் சில காலம் தொடர்பு இருந்து வந்தது. கன்னட நடிகர் ராஜ்குமார்கடத்தப்பட்டபோது ராஜாராமனும் வீரப்பனுடன் காட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் விடுதலைப்புலிகளுடனும் ராஜாராமனுக்குத் தொடர்பு இருந்தது. இலங்கையில் இந்திய அமைதிப்படையை எதிர்த்துப் புலிகள் போரிட்டபோது, ராஜாராமனும் இந்தியப் படையினருக்கு எதிராகச் சண்டைபோட்டான் என்று கூறப்படுகிறது.

நக்சலைட்டாக இருந்த ராஜாராமன் பின்னர் கொலை, கொள்ளைக்காரனாகவும் மாறினார். வங்கிகள், வீடுகளில்புகுந்து நகை, பணம் திருடுவது, கொலை செய்வது என்று இவருடைய எல்லைகள் விரிந்தன.

இது தவிர சென்னை பெசன்ட் நகரில் வங்கியில் கொள்ளையடிக்க முயன்றபோது, கேஷியரை சுட்டுக் கொன்றவழக்கு உள்ளிட்ட ஆறு கொலை வழக்குகளும் இவர் மீதுஉள்ளன.

ராஜாராமன் மீது ஒன்பது வெடிகுண்டு வழக்குகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது மதுரை, விருத்தாச்சலம்,காரைக்குடி ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்கள் ஆகும்.

கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த ராஜாராமன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்தான்சென்னையில் போலீஸாரிடம் வசமாகச் சிக்கிக் கொண்டார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+