அவசரமாய் கூடுகிறது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்
ஐ.நா.சபை:
அரபு நாடுகள், அணி சேரா நாடுகளின் கோரிக்கையை ஏற்று இன்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் அவசரமாகக் கூடுகிறது.
ஈராக்கில் போரைத் தடுத்து நிறுத்த உடனே ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலைக் கூட்ட வேண்டும் என இந்த நாடுகள் கோரிக்கை விடுத்திருந்தன.இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 1.30க்கு இக் கூட்டம் தொடங்கும்.
போரை அமெரிக்கா உடனே நிறுத்த வேண்டும் என குவைத் தவிர்த்த 22 அரபு நாடுகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அதேபோல 115 நாடுகள் கொண்ட அணி சேரா நாடுகள் அமைப்பும் போரை நிறுத்த ஐ.நா. தலையிட வேண்டும் என கோரியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புக் கவுன்சிலில் இடம்பெறாத நாடுகளும் கூட பேசலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் போருக்கு எதிராகதீர்மானம் கொண்டு வரப்படுமா என்று தெரியவில்லை.
ஏனெனில் அப்படிப்பட்ட தீர்மானம் கொண்டு வந்தால் அதை அமெரிக்காவும் பிரிட்டனும் தங்களது வீடோ அதிகாரத்தைக் கொண்டு ரத்துசெய்துவிட முடியும். இதனால் இக் கூட்டத்தால் பெரிய பலன் ஏதும் ஏற்படும் என்று எதிர்பார்க்க முடியாது.
இந் நிலையில் ஈராக்கில் போரை நிறுத்துமாறு பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் ரஷ்யா கோரிக்கை வைக்கும். அதற்கு ஆதரவாகநாடுகளையும் திரட்டும் என அந் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் இகார் இவானோவ் கூறினார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications