சமத்துவபுரம் வீடுகளுக்கு "சீல்": நடுத் தெருவில் தவிக்கும் மக்கள்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அத்தனூரில் திமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டபெரியார் சமத்துவபுரத்தில் உள்ள சில வீடுகளுக்கு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். இதனால்அந்த வீடுகளில் குடியிருந்தோர் நடுத் தெருவுக்கு வந்துள்ளனர்.
அத்தனூரில் உள்ள சமத்துவபுரத்தில் 100 வீடுகள் உள்ளன. இங்கு திடீரென வந்த அதிகாரிகள் சிலவீடுகளைப் பூட்டி சீல் வைத்துச் சென்றனர்.
இதனால் அந்த வீடுகளில் குடியிருந்தோர் நடுத் தெருவுக்கு வந்துள்ளனர். தாங்கள் வேலைக்குப்போயிருந்த சமயமாகப் பார்த்து அதிகாரிகள் வந்து சீல் வைத்துச் சென்றதாக அவர்கள்குமுறியுள்ளனர்.
இதே போல மேலும் பல வீடுகளுக்கு சீல் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் மற்றவீடுகளில் குடியிருப்போரும் பயந்து போய் உள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications