அமெரிக்காவுக்கு ஐ.நா. சபை கடும் எதிர்ப்பு
ஐ.நா. சபை:
போரில் ஈராக் நாட்டு அப்பாவி மக்கள் அநியாயமாகக் கொல்லப்படுவது குறித்து ஐக்கிய நாடுகள்சபையின் பொதுச் செயலாளரான கோபி அன்னான் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்தப் போர் நியாயமில்லாதது என இந்தியாவும் மலேசியாவும் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில்கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தன. மலேசியாவும் ஈராக்கும் ஐ.நா. சபையை மிகக் கடுமையாககண்டித்துப் பேசின.
காட்டுமிராண்டித்தனமாக நடந்து வரும் ஒரு தாக்குதலை ஐ.நா. கண்டும் காணாமல்உட்கார்ந்திருப்பது வெட்கக்கேடானது என மலேசியத் தூதர் கூறினார்.
அணி சேரா நாடுகள் மற்றும் அரபு லீக் நாடுகளின் கூட்டமைப்புகள் கோரிக்கையை ஏற்று ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் அவசரமாகக் கூடியது.
இதில் போர் காரணமாகத் தவித்துக் கொண்டிருக்கும் சுமார் 1.3 கோடி ஈராக் மக்களுக்குத்தேவையான உணவு, குடிநீர் வழங்கும் பணிகளை விரைவில் தொடங்குவது குறித்து இந்தக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அமெரிக்கா-பிரிட்டிஷ் படைகளின் தாக்குதலில் ஈராக்கில் உள்ள அப்பாவி மக்கள்கொல்லப்படுவது அதிகரித்துக் கொண்டே வருவதாகவும் இதனால் ஐ.நா. சபை மிகவும் கவலைஅடைந்துள்ளதாகவும் அன்னான் தெரிவித்தார்.
போரினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் அனைத்தையும்அமெரிக்காதான் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே ஐ.நாவும் அவசரமாக இரண்டு உதவிக் குழுக்களை ஈராக்கிற்கு அனுப்பியுள்ளது.தங்கள் எச்சரிக்கையையும் மீறி ஈராக் மீது போர் தொடுக்க முடிவு செய்ததற்காக அமெரிக்கா,பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் நாடுகளை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் வன்மையாகக் கண்டித்தது.
தொடர்ந்து கூட்டம் நடந்து வருகிறது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications