ஈராக்குக்கு உதவி: அன்னானிடம் பிளேர் வலியுறுத்தல்
ஐக்கிய நாடுகள்:
போருக்குப் பின்னர் ஈராக்கில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றுஐக்கிய நாடுகள் அமைப்பை பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் வலியுறுத்தியுள்ளார்.
நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை தலைமை அலுவலகத்திற்குச் சென்ற டோனி பிளேர் அங்கு அதன்பொதுச் செயலாளரான கோபி அன்னானைச் சந்தித்துப் பேசினார்.
ஈராக் போர் தொடர்பாக இருவரும் சுமார் 20 நிமிடங்களுக்குத் தனியாகப் பேச்சு நடத்தினர்.போருக்குப் பின்னர் ஈராக் மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை ஐ.நா. வழங்கவேண்டும் என்று அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.
பின்னர் பிளேரும் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஜாக் ஸ்டிராவும் ஐ.நா. அதிகாரிகளுடன் பேச்சுநடத்தினர்.
இதையடுத்து நிருபர்களைச் சந்திக்காமலேயே ஐ.நா. சபையை விட்டு வெளியேறிய பிளேர் அவசரஅவசரமாக லண்டன் கிளம்பிச் சென்றார்.
போருக்குப் பின்னர் ஈராக்கில் சதாம் ஹூசேன் ஆட்சி அகற்றப்பட்டால் அங்கு யாரை ஆட்சியில்அமர்த்துவது என்பது குறித்து பிளேருக்கும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்கும் கருத்து வேறுபாடுஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே உணவுக்கா எண்ணெய் என்ற திட்டத்தை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில்உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதன்படி போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுவழங்கும் திட்டத்தை ஐ.நா. அமல்படுத்த உள்ளது.
அமெரிக்கா திடீர் வெளிநடப்பு:
இதற்கிடையே அவசரமாகக் கூடிய ஐ.நா. பாதுகாப்புக் குழு கூட்டத்திலிருந்து அமெரிக்கஅதிகாரிகள் திடீரென்று வெளிநடப்பு செய்தனர்.
தங்கள் நாட்டு மக்களைப் பூண்டோடு அழிக்க அமெரிக்கா முயற்சித்து வருவதாக ஈராக் தூதர்முகமது அல்தாவுரி குற்றம் சாட்டிப் பேசினார்.
இதைத் தொடர்ந்து ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் ஜான் நெக்ரோபோன்ட் தலைமையிலானஅமெரிக்க அதிகாரிகள் இதைக் கண்டித்து கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறினர்.
-->


Click it and Unblock the Notifications
