கள்ள 100 ரூபாய் நோட்டு புழக்கம்: மதுரையில் 5 பேர் கைது
மதுரை:
மதுரையில் ரூ.100 கள்ள நோட்டுக்களைப் புழக்கத்தில் விட்ட 5 பேர் கும்பலை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
மதுரை-கோமதிபுரம் பகுதியில் பழ வியாபாரி ஒருவரிடம் பழம் வாங்கிய ஒருவர் நூறு ரூபாய்த்தாளைக் கொடுத்துள்ளார். அதை வாங்கிய வியாபாரிக்கு ரூபாய் நோட்டின் மீது சந்தேகம்ஏற்பட்டது.
இதையடுத்து அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு அந்நபரைக் கூட்டிச் சென்றார் வியாபாரி.அங்கு ரூபாய் நோட்டைப் பரிசோதித்தபோது அது கள்ள நோட்டு என்று தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அந்நபரை போலீஸார் கைது செய்தனர். அவரது பெயர் சதானந்தம். அவரிடம்நடத்திய விசாரணையில், அன்பு நகரில் ஒரு வீட்டில் வைத்து கள்ள நோட்டு அச்சடிக்கப் படுவதாகதகவல் கிடைத்தது.
உடனடியாக அன்பு நகருக்கு போலீஸ் படை விரைந்தது. அங்கு கம்ப்யூட்டர், ஸ்கேனர்ஆகியவற்றை வைத்து நூறு ரூபாய் கள்ள நோட்டுக்கள் அச்சிடப்பட்டு வந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வீட்டில் இருந்த விஜயன், ஜோ உள்ளிட்ட 4 பேரை போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.இவர்கள் அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
இதுவரை ரூ.7.5 லட்சம் அளவுக்கு நூறு ரூபாய் கள்ள நோட்டுக்களை இவர்கள் புழக்கத்தில்விட்டுள்ளதும் தெரிய வந்தது.
-->
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications